முதல்ல கொஞ்சம் பதட்டமா இருந்துச்சு.. ஆனா முதல் பந்து வீசினதுக்கு அப்புறம்.. ஆட்டநாயகன் விருது பெற்ற மயங்க் யாதவ் பேட்டி

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லக்னோ மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில், லக்னோ அணியில் அறிமுகமான 21 வயது வீரர் மயங்க் யாதவ் தனது அதிவேக பந்துவீச்சின் மூலம் அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இந்தியாவின் மிகவும் பிரபலமான உள்நாட்டுத் தொடரான ஐபிஎல்லில் லக்னோ அணிக்காக தனது முதல் போட்டியில் அறிமுகமான இந்த இளம் வீரர் மணிக்கு 156 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி அசத்தியிருக்கிறார். இவர் வேகத்தில் மட்டும் கவரவில்லை. பந்துகளை துல்லியமான லைன் அண்ட் லென்தில் வீசுவதிலும், தேவையான நேரத்தில் பவுன்சர் மற்றும் யார்க்கர்களையும் மிக அற்புதமாக வீசி எதிரணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறார்.

- Advertisement -

அண்டை நாடான பாகிஸ்தானில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பஞ்சமே இருக்காது. அன்று முதல் இன்று வரை தரமான வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்குவதில் ஆஸ்திரேலிய அணிக்கு நிகராக எப்பவுமே பாகிஸ்தான் அணி சிறந்தது. ஆனால் இந்தியாவில் வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தாலும் இது போன்ற பந்துவீச்சில் வேரியேசன்கள் காட்டும் வீரர்கள் என்பது அரிது. மயங்க் யாதவ் நேற்றைய போட்டியில் இவர் சாதாரணமாக வீசும் பந்தின் வேகமே 140 கிலோ மீட்டரில் இருந்து ஆரம்பிக்கிறது.

- Advertisement -

இந்தியாவில் ஜாகிர் கானின் காலகட்டத்திற்கு பிறகு ஒரு தரமான பந்துவீச்சாளர் கிடைத்திருக்கிறார் என்றால் அது தற்போது பும்ரா மட்டுமே. ஹைதராபாத் அணியில் விளையாடி வரும் உம்ரான் மாலிக் நன்றாக பந்து வீசினாலும் அவர் இக்கட்டான நேரத்தில் வேகத்தை குறைப்பதிலும், பந்து வீச்சில் வேரியேஷன்கள் காட்டுவதிலும் மிஸ் செய்கிறார்.

ஐபிஎல் தொடர் பல குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் விளையாடப்பட்டு வந்தாலும் கூட, இளம் வீரர்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பும்ரா, ஹர்திக் பாண்டியா என ஆரம்பித்து திலக் வர்மா, ரிங்கு சிங் என இப்போது வரை இளம் திறமையான வீரர்களை அடையாளம் காட்டிக் கொண்டு இருக்கிறது. மேலும் நேற்றைய போட்டியின் மூலம் மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்ற மயங்க் யாதவ் கூறுகையில்

- Advertisement -

“எனது அறிமுகப் போட்டி இவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. முதல் போட்டி என்பதால் போட்டிக்கு முன்னர் சிறிது பதட்டமாக உணர்ந்தேன். ஆனால் முதல் பந்து வீசிய பிறகு அந்தப் பதட்டம் முற்றிலுமாக குறைந்து என்னுடைய இலக்கு ஸ்டம்புகளை நோக்கி நேராக வீச வேண்டும் என்பதாகவே இருந்தது. ஆரம்பத்தில் எனது பந்துவீச்சில் வேரியேஷன்கள் காட்ட முயற்சி செய்தேன். ஆனால் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு நன்றாக உதவியது. தொடர்ந்து வேகமாக லென்தில் மட்டுமே கவனம் செலுத்தி வீச முயற்சி செய்தேன் அது எனக்கு நன்றாக கை கொடுத்தது.

இதையும் படிங்க: இந்த பையன் பிரமாதமா பவுலிங் போடுறார்.. நாங்க மேட்ச் தோத்ததே இவராலதான்.. தோல்வி குறித்து தவான் பேச்சு

மேலும் அணியின் கேப்டன் எனக்கு நல்ல ஆதரவினை அளித்தார். என் சிறிய வயதிலேயே என் கிரிக்கெட் வாழ்க்கை அற்புதமாக தொடங்கி இருக்கிறது. சில இலக்குகள் இருந்தது. ஆனால் நாம் அடைகின்ற காயத்தினால் நாம் நினைப்பது நடக்காமல் போய்விடும்” என்று கூறுகிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles