ஐபிஎல் தொடருக்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் சிறிது இடைவெளிக்குப் பிறகு இணைந்த விராட் கோலி டி20 கிரிக்கெட்டைப் பிரபலப்படுத்துவதற்காகவே தன்னை இந்திய அணியில் வைத்துள்ளார்கள் என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
சமீபத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து இரு விலகிய விராட் கோலி பின்னர் தனிப்பட்ட காரணங்களுக்காக முழு தொடரில் இருந்து விலகினார். இதற்குப் பிறகு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடுவாரா? மாட்டாரா? என்று எதிர்பார்ப்புகள் கிளம்பிய நிலையில் சில முன்னால் இந்திய வீரர்கள் விராட் கோலி விளையாடுவது சந்தேகம்தான் என்ற வகையில் கருத்துக்களை கூறிவந்தனர்.
மேலும் இந்த ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் செயல்பாடுகளை பொருத்து அவரை உலகக்கோப்பையில் தேர்வு செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகிறது. மேலும் அவரை டி20 உலக கோப்பையில் தேர்வு செய்ய வேண்டாம் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ரோஹித் சர்மாவிடம் கூறியதாகவும், அதை அவர் ஏற்க மறுத்து பின்னர் அஜித் அகர்கரிடம் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியது.
சமீபத்தில் குஜராத், மும்பை அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக இருந்த கெவின் பீட்டர்சன், ரவி சாஸ்திரியிடம் டி20 கிரிக்கெட் பிரபலப்படுத்த விராட் கோலி போன்ற வீரர்கள் இந்தியாவிற்கு அவசியம் என்று கூறிய நிலையில், அதற்கு பதில் அளித்த ரவி சாஸ்திரி கிரிக்கெட்டை பிரபலப்படுத்துவதை விட உலக கோப்பையை வெல்வதுதான் முக்கியம். அதனால் உலகக் கோப்பையில் விராட் கோலி தேர்வு செய்யப்படக்கூடாது என்பது போல கருத்தினை தெரிவித்தார்.
இதை அனைத்தையும் அறிந்த விராட் கோலி பெங்களூர் அணி உடனான முதல் போட்டிக்குப் பிறகு டி20 கிரிக்கெட் பிரபலப்படுத்துவதற்காகவே தன்னை இந்திய அணியில் வைத்துள்ளனர் என்று அனைவருக்கும் பதிலடி தரும் வகையில் ஒரு கருத்தை வெளியிட்டார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா விராட் கோலியின் இந்த அறிக்கை தேவையே இல்லாதது என்று கூறியிருக்கிறார். இது குறித்த அவர் கூறுகையில்
“விராட் கோலி வெளியிட்ட அறிக்கை தேவையே இல்லாதது என்றுதான் நான் நினைக்கிறேன். ஏனென்றால் அவர் என்ன மாதிரியான ஒரு வீரர், டி20 கிரிக்கெட்டில் என்ன சாதனை படைத்திருக்கிறார் என்பது அனைவருக்குமே தெரியும். விராட் கோலி 2024 டி20 உலக கோப்பையின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறார். ஆனால் இறுதி முடிவு தேர்வாளர்களின் கையில் உள்ளது.
இதையும் படிங்க :மைதானத்திற்குள் வந்தால் உஷ்.! பாண்டியாவுக்கு எதிரா சத்தமே வர கூடாது.. கிடுக்குப்பிடி பிடித்த மும்பை இந்தியன்ஸ் அணி
அவர்கள் எந்த மாதிரியான வீரர்களை தேர்வு செய்கிறார்கள் என்பது அவர்களே முடிவு செய்யட்டும். 2007ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு புதிய வீரர்கள் கொண்ட இளம் படையை அனுப்பியது போல் இந்த முறையும் புதிய வீரர்களை அனுப்புகிறார்களா? அல்லது பரிசோதனை செய்யப்பட்ட வீரர்களை அனுப்புகிறார்களா? என்பது அவர்களின் முடிவு” என்று கூறி இருக்கிறார். இந்த நிலையில் பிசிசிஐ டி20 உலக கோப்பைக் காண உத்தேச அணியை வரும் ஏப்ரல் மாதம் வெளியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

