மைதானத்திற்குள் வந்தால் உஷ்.! பாண்டியாவுக்கு எதிரா சத்தமே வர கூடாது.. கிடுக்குப்பிடி பிடித்த மும்பை இந்தியன்ஸ் அணி

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் தற்போது பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் போட்டி வருகிற திங்கட்கிழமை மும்பையின் சொந்த மைதானமான வான்கடேயில் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணியின் எதிர்காலம் கருதி சமீபத்தில் ரோகித் சர்மாவிடமிருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டு டிரேடிங் முறையில் குஜராத் அணியிடமிருந்து வாங்கப்பட்ட ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக அறிவித்தது. அன்றிலிருந்து மும்பை நிர்வாகத்திற்கும் அணி வீரர்களுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. ‘ஒரே குடும்பம்’ என்று அழைக்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மாவின் ஆதரவாளர்கள் ஒருபுறமும், ஹர்திக் பாண்டியாவின் ஆதரவாளர்கள் ஒரு புறமும் இருக்கின்றனர்.

- Advertisement -

மேலும் ஹர்திக் பாண்டியாவுக்கு செல்லும் இடமெல்லாம் ரசிகர்கள் அவருக்கு எதிராக கரகோஷங்களை எழுப்பி வருகின்றனர். அகமதாபாத்தில் மும்பை குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் குஜராத் அணி ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக கரகோஷங்களை எழுப்பினர். அதற்கு அடுத்ததாக ஹைதராபாத்தில் சன்ரைஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் ரோகித் சர்மாவின் ஆதரவாளர்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக கரகோஷங்களை எழுப்பினர்.

- Advertisement -

இந்த நிகழ்வால் கிரிக்கெட் உலகமே அதிர்ந்து பல்வேறு வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் தங்களது அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். இது மும்பை அணி நிர்வாகத்திற்கும் சற்று வருத்தத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் அமைந்துள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் கடந்த இரண்டு நாட்களாக பாண்டியாவுக்கு ஆதரவாகக் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகிறது.

வருகிற திங்கட்கிழமை சொந்த மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக போட்டி நடைபெறுவதால் அங்கும் ரசிகர்கள் தங்களது கரகோஷங்களை எழுப்பினால், அது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பல சிக்கல்களை உருவாக்கும். சொந்த மைதானத்திலேயே அணிக்கு எதிராக கரகோஷங்களை எழுப்புவது நல்லதாக இருக்காது.

- Advertisement -

இதனால் மைதானத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக கரகோஷங்களோ அல்லது கூச்சல்களோ யாராவது எழுப்பினால் அவர்களைக் காவலர்கள் உடனடியாக கண்டறிந்து மைதானத்தை விட்டு வெளியில் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு வாங்கடே மைதானமும் மும்பை அணிக்கு ஆதரவாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:மந்தமான ஸ்ட்ரைக் ரேட்.. டி20 கிரிக்கெட்டுக்கு கோலி செட்டாக மாட்டாரா.?. சர்ச்சையை கிளப்பும் நெட்டிசன்கள்.. பதிலடி கொடுத்து வரும் ரசிகர்கள்

இது கேட்பதற்கு சற்று அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும் மும்பை அணி நிர்வாகம் இது போன்ற செயல்களை முன்னரே நிகழ்த்தியுள்ளது.அதாவது மைதானத்திற்கு மும்பை அணி ரசிகர்களை தவிர வேறு அணிகளின் ஜெர்சிகள் கொண்ட ரசிகர்கள் உள்ளே வரக்கூடாது என்று அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் பாண்டியாவுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பும் வகையில் நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles