நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 10வது லீக் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக பெங்களூர் அணி வீரர் விராட் கோலி 53 பந்துகளில் 89 ரன்களைக் குவித்த போதிலும், சமூக வலைதளங்களில் விராட் கோலி எதிர்ப்பாளர்கள் அவருக்கு எதிராக கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் எதிர்கொண்டன. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சேஸ் செய்ய முடிவு செய்து, பெங்களூர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. முதல் 10 ஓவர்கள் வரை ஆடுகளம் நன்கு பேட்டிங்க்கு ஒத்துழைத்ததால் ஆர்சிபி அணி வீரர்கள் நன்றாக அடித்து ஆடி வந்தனர். பின்னர் நேரம் செல்லச் செல்ல பேட்டிங்க்கு சாதகமாக இருந்த ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக மாறிய நிலையில், பெங்களூர் அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதில் விராட் கோலி மட்டும் ஒரு முனையில் நிலைத்து 59 பந்துகளில் நான்கு பவுண்டரிகள், நான்கு சிக்ஸர்கள் என 83 ரன்களைக் குவித்தார். முதலில் 43 பந்துகளில் 62 ரன்கள் குவித்த விராட் கோலி பின்னர் அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த நிலையில் அடுத்த 16 பந்துகளில் வெறும் 21 ரன்கள் மட்டுமே குவித்தார். பின்னர் இறுதிக் கட்டத்தில் அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 8 பந்துகளில் 20 ரன்கள் குவித்ததன் மூலம் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 182 ரன்கள் 6 விக்கெட் இழப்புக்கு குவித்தது.
முதலில் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்த ஆடுகளம் கொல்கத்தா அணி களம் இறங்கியதும் முற்றிலும் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறியது போல் 7 ஓவர்களிலேயே 83 ரன்கள் குவித்தது. அதன் பிறகு கொல்கத்தா அணி வீரர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இறுதியில் 17 ஓவர்களிலேயே இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 50 ரன்கள் குவித்தார்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் விராட் கோலியாவது பெங்களூரு அணிக்குக் கை கொடுத்தார் என்று ஒரு தரப்பினர் பாராட்டி வரும் நிலையில், விராட் கோலியின் எதிர்ப்பாளர்கள் விராட் கோலியின் ஆட்டம் மிகவும் மந்தமாக உள்ளது. 140 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடியது தோல்விக்கு முக்கியக் காரணமாகும். மேலும் டி20 கிரிக்கெட்டில் 60 பந்துகளை விளையாடிவிட்டு 140 ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்கள் அடிப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது என்று எதிர்ப்பாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இன்னும் சிலர் ரோகித் சர்மாவோடு கம்பேர் செய்து 80 மீட்டர் பவுண்ட்ரி லைன் கொண்ட ஆடுகளத்தில் ரோஹித் சர்மா 148 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடுகிறார். ஆனால் வெறும் 60 மீட்டர் எல்லை கொண்ட ஆடுகளத்தில் விராட் கோலி மிகவும் மந்தமான ஸ்ட்ரைக் கேட்டில் ஆடுவது ஏற்கத்தக்கது அல்ல. மேலும் வருகிற டி20 உலக கோப்பையில் விராட் கோலியைத் தேர்வு செய்வது குறித்து தேர்வாளர்கள் கருத்தில் கொள்ளக்கூடாது என்றும் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விராட் கோலியின் ஆதரவாளர்கள் சமீபத்தில் நடந்து முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கேஎல் ராகுல் 50 டாட் பால்கள் விளையாடினார். அதாவது 66 ரன்கள் குவிக்க 107 பந்துகளை எடுத்துக் கொண்டார்.
இதையும் படிங்க :சிவம் தூபே சிஎஸ்கே போனதால தப்பிச்சார்.. ஆர்சிபில இருந்திருந்தா அவ்ளோதான்.. ஹர்பஜன்சிங் ஓபன் டாக்
அது குறித்து எவரும் பேசவில்லை. நேற்று நடந்த போட்டியில் முன்னணி வீரர்கள் அனைவரும் ஆட்டம் இழந்த நிலையில், விராட் கோலி மட்டுமே களத்தில் கடைசி வரை நின்று விளையாடினார். மேலும் ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்த போதும் தன்னால் முடிந்தவரை போராடினார் என்று விராட் கோலியின் ரசிகர்களும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
1) Rohit Sharma at 80m boundary – 43(29) with sr of 148.28 🔥
— ᴘʀᴀᴛʜᴍᴇsʜ⁴⁵ (@45Fan_Prathmesh) March 29, 2024
2) Virat Kohli at flat pitch, 60m boundary – 83(59) with the massive 140 SR 😭😭
Nah Selecters Shouldn't consider kohli for t20wc ! pic.twitter.com/s83ROQW81L

