சமீபத்தில் சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 போட்டியில் காயத்திலிருந்து மீண்டு வந்த பத்திரானா குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சேர்க்கப்பட்டிருந்தார்.
அப்போது பந்து வீசுவதற்கு முன் பத்திரானா தோனியின் கால்களைத் தொட்டு வணங்கியதைத் தொடர்ந்து அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அதன் உண்மையான காரணம் தற்போது வெளிவந்துள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான ஏழாவது போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் சென்னை அணியை பேட்டிங் செய்ய அழைக்க 20 ஓவர்களில் சென்னை அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது.
சென்னை அணியின் ஆல் ரவுண்டர் சிவம் துபே அதிகபட்சமாக 51 ரன்கள் குவித்தார். மற்றும் தொடக்க ஆட்டக்காரர்கள் ருத்ராஜ் மற்றும் இரட்சின் ரவீந்திரா ஆகியோர் தலா 46 ரன்கள் குவித்து சென்னை அணிக்கு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். பின்னர் இலக்கை துரத்தி விளையாடிய குஜராத் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் சென்னை அணியினர் சிறப்பாக பந்து வீசி குஜராத் அணியை கட்டுப்படுத்தினார். சிறப்பாக பந்து வீசிய துசார் தேஷ்பாண்டே நான்கு ஓவர்கள் வீசி 21 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்த நிகழ்வில் காயத்திலிருந்து மீண்டு வந்த இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் பத்திரானா குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட வாய்ப்பு பெற்றார். அப்போட்டியில் பந்து வீசுவதற்கு முன் தோனியின் கால்களை தொட்டு வணங்குவது போல ஒரு கோணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது. இதனைக் கண்ட ரசிகர்கள் தோனியின் மீது பத்திரனா வைத்துள்ள மரியாதையைக் கண்டு பாராட்டினர்.
ஆனால் தற்போது வந்துள்ள தெளிவான வீடியோவில், பத்திரானா தோனிக்கு அருகில் வெள்ளை நிறத்தில் உள்ள பந்துவீச்சு குறிப்பானை மட்டுமே குனிந்து எடுக்கிறார். அவர் தோனியின் காலில் எல்லாம் விழுந்து வணங்கவில்லை என்பது தெளிவாகியது. ஒரு வீடியோவின் உண்மை தன்மையை ஆராயாமல் இது போன்ற பொய்யான தகவல்களை பரப்பக் கூடாது என்று வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதையும் படிக்கலாமே:வீடியோ: மலிங்காவை தள்ளிவிட்டாரா பாண்டியா.?. வெளியான வீடியோ.. கோபத்தில் ரசிகர்கள்.. உண்மை என்ன.?
பத்திரானா தற்போது சென்னை அணிக்கு திரும்பியுள்ளதால் சென்னை அணி பந்து வீச்சில் மிகவும் வலுவாக உள்ளது. 21 வயதான பத்திரானா கடந்த சீசனில் 12 ஆட்டங்களில் விளையாடி 19 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இவரது பந்து வீச்சு எகானமி 07.25ஆகும். இவரது வருகையால் சுழற் பந்துவீச்சாளரான தீக்சானாவுக்கு குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
The Actual Video..Which Was Fakely Spreaded as Pathirana Touching Dhoni's feet and Taking Blessing 😭🤣🤣🤣 pic.twitter.com/f0Gf9n924k
— Mumbai Indians TN (@MumbaiIndiansTN) March 29, 2024

