கேரளால இவர பத்திதான் கேக்குறாங்க.. பெரிய பெயரா மாறிட்டு வராரு.. சஞ்சு சாம்சன் பேட்டி

ஐபிஎல் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஒன்பதாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடின. இதில் 12 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.

- Advertisement -

டாசை இழந்த ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்தப் போட்டியில் எதிர்பாராத வகையில் 36 ரன்களுக்கு முதல் மூன்று விக்கெட்டுகளை இழந்தது. சஞ்சு சாம்சன்,ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர். இதற்குப் பின்னர் ராஜஸ்தான் அணி மீண்டு வருவது கடினம் என்று நினைத்த வேளையில் இளம் வீரர் ரியான் பராக் மற்றும் அனுபவ வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி டெல்லி அணியின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டதோடு மட்டுமில்லாமல் ஏதுவான பந்துகளை சிக்சருக்கு விரட்டியும் விளையாடினார்.

- Advertisement -

சிறப்பாக விளையாடிய அஸ்வின் 19 பந்துகளில் 29 ரன்கள் குவித்தார். அதன் பிறகு ரியான் பராக்குடன் துருவ் ஜூரேல் இணைந்தார். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி வந்த ரியான் பராக் டெல்லி அணியின் நார்ஜெ வீசிய கடைசி ஓவரில் 25 ரன்கள் குவித்து ராஜஸ்தான் அணி சவாலான ரன்களை குவிக்க உதவினார். இதன்மூலம் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இதனால் 186 ரன்கள் குவித்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு ஓரளவு நல்ல தொடக்கம் கிடைத்தாலும், மிடில் ஆர்டரில் களமிறங்க ஸ்டப்ஸ்சைத் தவிர மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் சொற்பரன்களிலேயே ஆட்டமிழந்து வெளியேறினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அணியின் கேப்டன் பந்த் 26 பந்துகளில் 28 ரன்கள் மட்டுமே குவித்து வெளியேறினார். இறுதிக்கட்டத்தில் ஸ்டெப்ஸ் அதிரடியாக விளையாடினாலும் அவரால் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை.

இதனால் ராஜஸ்தான் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது. இந்த வெற்றிக்கு பின்னர் பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன்
“நாங்கள் முதல் 10 ஓவர்களில் விரைவிலேயே விக்கெட்டுகளை இழந்ததால் இம்பாக்ட் பிளேயர் விதியை பயன்படுத்தி ரோமன் போவலை விளையாட வைக்க வேண்டும் என்று நினைத்தோம். மேலும் அவரிடம் பேட்டிங் செய்ய தயாராக இருக்குமாறு கூறினோம்.

- Advertisement -

ஐபிஎல் தொடர் மாறிவரும் வேளையில் முதலில் 11 வீரர்களை மட்டுமே வைத்து திட்டமிட்டோம். இந்த இம்பேக்ட் பிளேயர் விதியால் இப்போது 15 வீரர்களை வைத்து திட்டமிட வேண்டி இருக்கிறது. நானும் பயிற்சியாளர் சங்காவும் 15 முதல் 17 ஓவர் வரையில் இம்பாக்ட் பிளேயர் குறித்து ஆலோசனை செய்து கொண்டிருந்தோம். இன்று பந்துவீச்சில் ஆவேஸ்கான் நன்றாக வீசினார். கடந்த நான்கு வருடங்களாக ரியான் பராக் என்பது பெரிய பெயராக மாறி வருகிறது. நான் கேரளாவில் எங்கு சென்றாலும் அவரைப் பற்றியே என்னிடம் கேட்கிறார்கள்.

அவர் எப்போது மீண்டு வந்து அதிரடியாக விளையாடுவார் என்று கேட்கிறார்கள். அவர் இந்திய கிரிக்கெட்டுக்காக இன்னும் நிறைய விஷயங்கள் கொடுக்க வேண்டி இருக்கிறது” என்று கூறி இருக்கிறார். இந்த போட்டியின் மூலம் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி புள்ளி பட்டியலில் தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles