“கவனமா இருங்க.. நான் எப்ப வேணாலும் விலகலாம்”.. தோனி பேசியதை வெளியிட்ட ருத்ராஜ்

17 வது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து மகேந்திர சிங் தோனி கேப்டன்சியை விட்டு விலகியது தற்போது ஐபிஎல் களத்தின் ஹாட் டாபிக்காக உள்ளது.

- Advertisement -

மகேந்திர சிங் தோனி தனது கேப்டன்சியை விட்டு விலகி விடலாம் என 2022ஆம் ஆண்டே முடிவு செய்து ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்தார். தோனியின் செல்லப் பிள்ளைகளில் சுரேஷ் ரெய்னா போல ரவீந்திர ஜடேஜாவும் ஒருவர். இந்திய அணியில் இருந்து இவருக்கான வாய்ப்பினை உருவாக்கிக் கொடுத்தது மட்டுமல்லாமல், சென்னை அணியில் நிரந்தர வீரராகவே இடம் பிடித்து விட்டார்.

- Advertisement -

பேட்டிங், பந்து வீச்சு மற்றும் பீல்டிங் என அனைத்திலும் கலக்கிய ரவீந்திர ஜடேஜாவுக்கு கேப்டன்சி மட்டும் ஏனோ ஒத்துவரவில்லை. கேப்டனாக பங்கு பெற்ற எட்டு போட்டிகளில் ஆறு போட்டிகளில் தோல்வியை தழுவி இரண்டு போட்டிகள் மட்டுமே அவரால் வெற்றி பெற முடிந்தது. இதனால் தனக்கு கேப்டன்சி ஒத்து வராது என முடிவு செய்து மீண்டும் தோனியிடமே ஒப்படைத்தார். இதனால் அந்த சீசனில் சென்னை அணியால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை.

- Advertisement -

எனவே 2023ஆம் ஆண்டு மீண்டும் களம் இறங்கிய சென்னை அணி தோனியின் கேப்டன்ஷியில் மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி ஐந்தாவது முறையாக சாம்பியன் என்ற அந்தஸ்தை பெற்றது. எனவே 2024-ம் ஆண்டும் மகேந்திர சிங் தோனி தனது கேப்டன்சியை தொடர்வார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. அல்லது தொடரின் பாதியில் புதிய கேப்டனை அறிவித்துவிட்டு விலகுவார் என்று கருதப்பட்டது.

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக போட்டி நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னர் தான் விலகுவதாக அறிவித்திருக்கிறார். இதுகுறித்து தற்போதைய சென்னை அணியின் கேப்டன் ருத்ராஜ கெய்க்வாட் கேப்டன்சி குறித்த தோனி தனக்கு முன்னரே தெரிவித்ததாகவும், அடுத்த ஆண்டு தயாராக இருக்கும்படி கூறியதாகவும் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார் இது குறித்து அவர் கூறுகையில்

- Advertisement -

“கடந்த ஆண்டு மகி பாய் எனக்கு கேப்டன்சியைப் பற்றி சில நுணுக்கங்களை எடுத்துரைத்தார். எனவே தயாராக இருங்கள், இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கக் கூடாது என்னை தயார்படுத்தினார். நான் தற்போது முகாமிற்கு வந்த போது கேப்டன்சி குறித்த பயிற்சிகளில் ஈடுபட வைத்தார். எனவே நான் கேப்டனாகப் போவதை ஒரு வாரத்திற்கு முன்பாகவே நான் உறுதிப்படுத்தி விட்டேன்” என்று கூறி இருக்கிறார்.

எனவே மகேந்திர சிங் தோனியின் முடிவு கடந்த ஆண்டே எடுக்கப்பட்டு விட்டது. அதற்காகவே ருத்ராஜை தயார்படுத்தி வந்திருக்கிறார். தகுந்த திட்டங்களுடன் போட்டி தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பு தனது கேப்டன்சியை விட்டு விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles