கேப்டன்சியை விட்ட ‘தல’ தோனி.. ரோஹித் சர்மா போட்ட பதிவு.. கண் கலங்கும் ரசிகர்கள்

17 வது ஐபிஎல் சீசன் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இரு பெரும் ரசிகர் படையைக் கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுவதால் இப்போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

இப்போட்டிக்காக அணி வீரர்கள் தயாராகி வரும் நிலையில், ரசிகர்களும் தயாராகி வருகின்றனர். போட்டி நாளை மாலை தொடங்க இருப்பதால், வெளியூரில் இருந்து வரும் ரசிகர்கள் இன்று இருந்தே டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளத் தொடங்கி விட்டனர். இது ஒரு புறம் இருக்க நடப்பு சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கடந்த முறை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாத பெங்களூர் அணி என்று இரு அணிகள் முதல் போட்டியில் மோதுகின்றன.

- Advertisement -

இதற்கு முன்னர் ஒரு சீசன் தொடங்கப்படுவதற்கு முன்பு முந்தைய சீசனில் சாம்பின் பட்டம் வென்ற அணி மற்றும் தோற்ற அணி என்று இரண்டு அணிகள் அதற்கு அடுத்த சீசனில் முதல் போட்டியில் விளையாடும். ஆனால் தற்போது இந்த முறையை பின்பற்றுவதில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை யாரும் எதிர்பார்க்காத விதமாக மகேந்திர சிங் தோனி கேப்டன்சி பொறுப்பில் இருந்து விலகி விட்டார்.

- Advertisement -

தொடரின் பாதியில் அல்லது இந்த தொடர் முழுவதுமே கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 27 வயதான ருத்ராஜ் கெய்க்வாட்டிடம் தனது கேப்டன்சியை ஒப்படைத்து இருக்கிறார். அணியில் சீனியர் வீரர்கள் என பல பேர் இருக்க, எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தோனி இந்த முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தோனியின் முடிவினை ஆதரித்து பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வரும் வேளையில், ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு நிகராக ஐந்து முறை சாம்பியன் பட்டம் பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா மகேந்திர சிங் தோனிக்கு வாழ்த்தினை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

மகேந்திர சிங் தோனி கேப்டன்சி பொறுப்பில் இருந்து விலகியதைத் தொடர்ந்து ரோஹித் சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவர் கேப்டனாக இருந்த போது இருவரும் கை குலுக்குவது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு அதற்கு கீழே கைகுலுக்கும் எமோஜியை பதிவு செய்திருக்கிறார். இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாக்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது. மும்பை அணியின் முன்னாள் கேப்டன் தல தோனிக்கு கொடுத்த மரியாதையை பார்த்து ரசிகர்கள் கண் கலங்கி வருகின்றனர்.

நடப்பு சீசனில் சென்னை அணியோ அல்லது மும்பை அணியோ சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினால் வேறொரு கேப்டன் கைப்பற்றிய முதல் கோப்பை என்றுதான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஏனெனில் இவர்கள் இருவரது கேப்டன்ஷியில்தான் ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles