2024 இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்க உள்ளது. இதற்காக இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது கேப்டன்சியை விட்டு விலகுவதாக அறிவித்திருக்கிறார்.
மகேந்திர சிங் தோனி எப்பொழுதுமே அவரது முடிவுகளை எடுப்பதில் தனித்துவம் வாய்ந்த மனிதர். யாருமே எதிர்பார்க்காத சூழ்நிலையில் தனது முடிவுகளை அறிவிப்பார். நாளை ஐபிஎல் போட்டி தொடங்க இருக்கும் நிலையில், எம்எஸ் தோனி அணியை வழி நடத்துவார் என்று அனைவராலும் நம்பப்பட்டது. ஆனால் திடீரென தனது கேப்டன்சியை விட்டு விலகுவார் என்று சிஎஸ்கே சிஇஓ கூட அறியவில்லை என்ற தகவல் வெளிவருகிறது.
தோனி தனது முடிவுகளை அதிரடியாக எடுப்பது முதல் முறை அல்ல. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த போது திடீரென தனது கேப்டன்சியை விட்டு விலகி விராட் கோலியிடம் ஒப்படைத்தார். அதேபோல ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் கேப்டன்சியை விட்டு விலகி விராட் கோலியிடமே எதிர்பாராத நேரத்தில் ஒப்படைத்தார். ஆனால் கேப்டன்சிக்காக விராட் கோலியை தயார்படுத்தி இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த உண்மையே.
இந்நிலையில் 2019ஆம் ஆண்டு இந்தியா உலகக் கோப்பையில் தோல்வியுற்ற பிறகு, ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இப்படி தனது மனதிற்கு ஒரு முடிவு சரி என்று தோன்றினால், அதை உடனடியாக நிறைவேற்றுவதில் தோனிக்கு நிகர் தோனிதான். 2008ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற மகேந்திர சிங் தோனி அதன் பிறகு அணியினை வெற்றிகரமாக வழி நடத்தி சென்னை ரசிகர்களின் உயிருக்கும் மேலான அன்பினைப் பெற்று ஒரு ஒரு தலைவனாகவே உயர்ந்து நிற்பதெல்லாம் தனிக்கதை.
எம்எஸ் தோனி தனது கேப்டன்சியை விட்டு விலகியதிலிருந்து அதை அமைதியாக தெரிவிக்க முடிவெடுத்து இருக்கிறார். இது சிஇஓ தலைமை அதிகாரி காசி விஸ்வநாதன் அவர்களுக்கே ஐபிஎல் கேப்டன்கள் கூட்டத்திற்கு முன்புதான் தோனியின் முடிவு குறித்து தெரிய வந்ததாம். எனவே தோனியின் இந்த முடிவு குறித்து காசி விஸ்வநாதன் கூறுகையில்
“மகேந்திர சிங் தோனி என்ன செய்தாலும் அது அணியின் நலன் சார்ந்தே அவர் முடிவெடுப்பார். கேப்டன்கள் கூட்டத்திற்கு முன்புதான் அவரின் இந்த முடிவை நான் அறிந்தேன். அவரது இந்த முடிவை நீங்கள் மதிக்க வேண்டும். இது முழுக்க முழுக்க அவருடைய முன்னெடுப்பு. 2022ஆம் ஆண்டு தோனி ஜடேஜாவிடம் கேப்டன்சியை ஒப்படைத்தார். ஆனால் அது ஜடேஜாவிற்கு ஒத்து வரவில்லை.
எனவே திரும்பவும் அது போல இந்த முறை கேப்டன்சி மாற்றப்படுமா என்பது குறித்து கேட்கிறீர்கள். இந்த முறை நிச்சயமாக சற்று வித்தியாசம் இருக்கும்.அந்த நேரத்தில் அது வேலை செய்யவில்லை. ஆனால் இந்த முறை வேறு” என்று கூறியிருக்கிறார். எனவே அவரது இந்த கருத்து ருத்ராஜே இனி கேப்டன்சியைத் தொடர போகிறார் என்று அறிவித்திருக்கிறார்.

