24.75 கோடி செலவு செய்தும் வேஸ்ட்.. மிகப் பெரிய தவறைச் செய்த KKR அணி..இவர் ஒருத்தர் கையில தான் இருக்கு

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் வருகிற 22ஆம் தேதி தொடங்க உள்ளது. போட்டிகள் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அணி வீரர்கள் அனைவரும் எதுவும் காயம் ஆகிவிடாமல் பயிற்சி மேற்கொள்கின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் ஐபிஎல்லில் இரு முறை சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, இம்முறை அணி தேர்வில் பெரிய தவறைச் செய்திருப்பதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். கொல்கத்தா அணி கடந்த சீசனில் சிறப்பாக செயல்படவில்லை.

- Advertisement -

அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் காயம் காரணமாக வெளியேறிய பிறகு, நித்திஷ் ராணா கேப்டனாக செயல்பட்டார். பேட்டிங்கில் ரிங்கு சிங் போன்ற நட்சத்திர வீரர்களை வெளிக்கொண்டு வந்த கொல்கத்தா அணி, வேகப்பந்து வீச்சில் பலவீனம் அடைந்தது. சர்துல் தாகூர், பெர்குசன் போன்ற வீரர்களை வைத்துக் கடந்த சீசனை ஒப்பேற்றி வந்தது.

- Advertisement -

எனவே இந்த முறை நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரை வாங்கி அணியினை பலப்படுத்தி விட வேண்டும் என்று முட்டி மோதியது. பல அணிகள் நல்ல நல்ல வேகப்பந்துவீச்சாளர்களை வாங்கிய போது கண்டு கொள்ளாத கொல்கத்தா அணி, ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் ஏலத்திற்கு வந்ததும் அவருக்காகவே காத்திருந்தது போல் விடாமல் துரத்தியது.

இறுதியாக 24.75 கோடியை அவருக்காக மட்டுமே செலவழித்து தன் அணியில் இணைத்துக் கொண்டது. ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு வீரருக்காக செலவு செய்த அதிகபட்ச தொகை இதுதான். அதுவும் கம்பீரின் ஆலோசனையின் பேரிலேயே மிட்சல் ஸ்டார்க்கை வாங்கியுள்ளனர். ஸ்டார்க்கை இவ்வளவு விலை கொடுத்து வாங்கும் அளவுக்கு அவர் தகுதியான வீரர் அல்ல என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

ஐபிஎல் விளையாடி கிட்டத்தட்ட பல வருடங்கள் ஆகியுள்ள ஸ்டார்க்கிற்கு காயம் காரணமாக கிரிக்கெட்டில் இருந்து சில காலம் ஒதுங்கி இருந்தார். பின்னர் காயத்திலிருந்து மீண்டு வந்து அணியில் விளையாடினாலும் முன்பு போல் பெரிய அளவில் விக்கெட்டுகளை வீழ்த்த முடிவதில்லை. சமீபத்தில் இந்தியாவில் நடந்த உலகக்கோப்பைத் தொடரிலேயே சொல்லிக் கொள்ளும்படி பங்களிப்பை அளித்திருந்தார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சை பொறுத்தவரையில் அதிக டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள் என்றால் அது ஆண்ட்ரே ரசல் மற்றும் மிட்சல் ஸ்டார்க் இருவர் மட்டுமே. மற்ற வேக பந்துவீச்சாளர்களுக்கு போதிய அனுபவம் கிடையாது. இவர்களில் ஹர்ஷித்ராணா மீது மட்டுமே சிறிய எதிர்பார்ப்பு உள்ளதாக தெரிகிறது. இப்படி பலவீனமான வேகப்பந்துவீச்சை கொண்டுள்ள கொல்கத்தா அணி ஸ்டார்க்கை மட்டுமே நம்பி களமிறங்குகிறது.

இப்படி வேகப்பந்து வீச்சில் பெரிய தவறை செய்திருப்பதாக பலரும் சுட்டிக்காட்டி வரும் நிலையில், அந்த அணியின் ஒரே ஆயுதம் சுழற் பந்து வீச்சு மட்டுமே. வருண் சக்கரவர்த்தி, சுனில் நரேன், முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் மட்டுமே பலம் சேர்க்கிறார்கள். எனவே பேட்டிங்கையும், சுழற்பந்து வீச்சையும், ஸ்டார்க்கை மட்டுமே நம்பி இந்த ஐபிஎல்லில் களமிறங்குகிறது கொல்கத்தா அணி.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles