ஐபிஎல்.. கோலி படைத்த மாபெரும் ரெகார்ட்.. இதைத்தொட ஒரு வீரருக்கு 6 ஆண்டுகள் தேவை

இந்திய கிரிக்கெட் 1980களில் கபில் தேவின் கைகளில் இருந்தது. அதற்குப் பிறகு 90களில் சச்சின் டெண்டுல்கர் தலைமை தாங்கினார். பிறகு 2005ஆம் ஆண்டு முதல் எம் எஸ் தோனி அதற்கு பொறுப்பேற்றார். தற்போது அது விராட் கோலியின் கையில் தஞ்சமடைந்திருக்கிறது.

- Advertisement -

கிரிக்கெட் என்றாலே தற்போதைய இளைஞர்களுக்கு முன்னோடியாகத் திகழ்வது விராட் கோலி தான். அந்த அளவிற்கு அவர் கிரிக்கெட்டுக்காக செய்த சாதனைகள் ஏராளம். இதுவே ஐபிஎல்-லை பொருத்தவரை 2016 ஆம் ஆண்டு வரை சுரேஷ் ரெய்னா அதிக ரன்கள் குவித்தவர் பட்டியலில் இருந்தார். அதற்குப் பிறகு 2016 ஆம் ஆண்டில் விராட் கோலி குவித்த ரன்கள் இன்னமும் யாரும் எட்ட முடியாத சாதனையாகவே இருந்து வருகிறது.

- Advertisement -

வருகிற 22ஆம் தேதி முதல் போட்டி சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோத உள்ளதால் இப்போட்டி ரசிகர்களின் மிக முக்கிய போட்டியாகக் கருதப்படுகிறது. ஏனெனில் ஆப்கானிஸ்தான் அணியுடனான டி20 தொடரில் கடைசியாக பங்கேற்ற விராட் கோலி அதன் பிறகு தன் சொந்த காரணங்களுக்காக இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார்.

- Advertisement -

அதற்குப் பின்னர் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக சமூக வலைதளங்களில் அறிவித்த அனுஷ்கா, கோலி தம்பதி பலரின் வாழ்த்துக்களை பெற்று வருகின்றனர். இந்நிலையில் வரும் ஐபிஎல்லில் விராட் கோலி களம் இறங்குவது குறித்து இந்திய முன்னாள் வீரர்கள் சிலர் சர்ச்சையான கருத்துக்களைக் கூறி வரும் நிலையில் அவரது வருகையைக் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

அதிலும் முதல் போட்டி சென்னை அணியுடன் என்பதால் நிச்சயம் இந்த போட்டி அனல் பறக்கும் என்று சந்தேகம் இல்லை. இந்நிலையில் இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றிலேயே 6 சீசன்களில் 500 ரன்களுக்கு மேல் குவித்த ஒரே வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்திருக்கிறார். அதாவது ரன் வேட்டையை 2011 ஆம் ஆண்டில் இருந்தே தொடங்கி இருக்கிறார்.

- Advertisement -

2011ஆம் ஆண்டு சீசனில் 557 ரன்கள் குவித்தவர், 2013 ஆம் ஆண்டு 634 ரன்கள் குவித்து அசத்தினார். 2015 ஆம் ஆண்டிலும் 505 ரன்கள் குவித்திருக்கிறார். அதேபோன்று 2016 ஆம் ஆண்டில் உச்சபட்ச பார்மில் இருந்த விராட் கோலி அந்த சீசனில் 973 ரன்கள் குவித்து தனி நபராக அதிகபட்ச ரன் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.

பின்னர் 2018 ஆம் ஆண்டில் 530 ரன்கள் தொட்ட விராட் கோலி, 2023 ஆம் ஆண்டில் 639 ரன்கள் குவித்தார். இந்த ஐந்து வருட இடைவெளியில் பார்ம் இன்றி தவித்த இவர் 500 ரன்களுக்கு மேல் அடிக்க முடியவில்லை. இருப்பினும் விராட் கோலியின் இந்த ரெக்கார்டை சமன் செய்ய குறைந்தது ஒரு வீரருக்கு ஆறு வருடங்களாவது தேவைப்படும். அந்த அளவிற்கு கிரிக்கெட்டின் பிதா மகனாக வளர்ந்து இருக்கிறார் கோலி.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles