தோனி அதை மட்டும் சொன்னா.. சிஎஸ்கே தயங்காம அவரை கழட்டி விடணும்.. அதான் இனி அணிக்கு நல்லது – முன்னாள் சிஎஸ்கே வீரர் பேட்டி

ஐபிஎல் 2027 ஏலத்திற்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் தக்கவைப்பு மற்றும் விடுவிப்பு குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்தச் சூழலில், அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியை விடுவிப்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும், சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின் முக்கியமான கருத்தைத் தெரிவித்துள்ளார். தோனி விளையாடப் போவதில்லை என்றால் அவரை அணியிலிருந்து விடுவிப்பதன் மூலம் சிஎஸ்கே அணிக்கு கூடுதலாக 4 கோடி ரூபாய் கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இந்தச் சூழ்நிலையில், எம்.எஸ். தோனி குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் சில முக்கியமான விஷயங்களைத் தெரிவித்துள்ளார். குறிப்பாக தோனியை வீரராகத் தக்கவைப்பதற்குப் பதிலாக பயிற்சியாளர் அல்லது ஆலோசகர் பொறுப்பில் அணியுடன் இணைத்துக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து அஸ்வின் கூறும்போது, “தோனி விளையாடப் போவதில்லை என்றால் அவரை விடுவிப்பது குறித்தும் சிஎஸ்கே அணி நிச்சயமாகப் பரிசீலிக்கலாம். அதன் மூலம் ஏலத்தில் பயன்படுத்துவதற்கு மேலும் 4 கோடி ரூபாய் கிடைக்கும். மேலும் சில வீரர்களை விடுவித்தால் 40 முதல் 45 கோடி ரூபாய் வரை ஏலத்திற்காக வைத்திருக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார். இந்தக் கருத்து தோனியின் எதிர்காலம் குறித்த விவாதத்தை மீண்டும் அதிகரித்துள்ளது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles