கோலி ரோஹித்தை விட என்னோட பவுலிங்கை சிறப்பா ஆடுனது இவங்கதான் – ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டி

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதில் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்பது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். இந்தியா – நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு மத்தியில் தனது யூடியூப் நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்திய வீரர்களை விட இங்கிலாந்து வீரர் ஒருவர் ஸ்பின்னர்களை மிகச்சிறப்பாக எதிர்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இந்தச் சூழ்நிலையில், சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதில் சிறந்த வீரர் குறித்து அஸ்வின் சில முக்கிய விஷயங்களைத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து அஸ்வின் கூறும்போது, “ஜோ ரூட்தான் என்னுடைய பந்துவீச்சை மிகச்சிறப்பாக எதிர்கொண்டவர். அவர் எப்போதும் சரியான பேட்டிங் பொசிஷனுக்குச் செல்வார். துணைக் கண்ட வீரர்களை ஒப்பிட வேண்டியதில்லை, சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதில் ஜோ ரூட் மிகப்பெரிய வித்தியாசத்தில் சிறந்தவர். அதேபோல் ரோஹித் சர்மா இயல்பாக விளையாடக்கூடியவர். விராட் கோலி அனைத்தையும் முன்கூட்டியே திட்டமிட்டு மிகவும் ஒழுங்காகத் தயாராக இருப்பார். இருவரிடமிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles