ஆசிய விளையாட்டு 2026: கிரிக்கெட் பைனலில் மழை பெய்தால் தங்கப் பதக்கம் யாருக்கு?

2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் கிரிக்கெட் இறுதிப்போட்டி மழையால் முழுமையாக ரத்து செய்யப்பட்டால், வெற்றியாளரை Ranking அடிப்படையில் தேர்வு செய்ய மாட்டார்கள். இறுதிப்போட்டியில் மோதும் இரு அணிகளுக்கும் தங்கப் பதக்கம் பகிர்ந்து வழங்கப்படும்.

- Advertisement -

அக்டோபர் 3ஆம் தேதி நடைபெற உள்ள இந்தப் போட்டிக்கு Reserve Day ஒதுக்கப்படவில்லை. எனவே மழை காரணமாக ஆட்டத்தை நடத்தவே முடியாத நிலை ஏற்பட்டால், இரு Finalist அணிகளும் இணைந்து தங்கம் வென்றதாக அறிவிக்கப்படும்.

- Advertisement -

இது முந்தைய ஆசிய விளையாட்டுப் போட்டியிலிருந்த நடைமுறையிலிருந்து மாறுபட்டது. 2023 ஹாங்சோ ஆசிய விளையாட்டில் இந்தியா–ஆப்கானிஸ்தான் இறுதிப்போட்டி மழையால் முடிவின்றி கைவிடப்பட்டபோது, Ranking அடிப்படையில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.

- Advertisement -

இந்த முறை இந்தியா அரையிறுதியில் இலங்கையை எதிர்கொள்கிறது. மற்றொரு அரையிறுதியில் பாகிஸ்தான்–வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டிகளும் மழையால் பாதிக்கப்பட்டால், அதிக Ranking கொண்ட அணிக்கு அடுத்த சுற்று வாய்ப்பு கிடைக்கும்.

ஆனால் இறுதிப்போட்டியில் நிலைமை வேறு. போட்டி தொடங்கி, இரு அணிகளும் குறைந்தபட்சம் தலா 5 ஓவர்கள் விளையாடும் அளவுக்கு ஆட்டம் நடைபெற்றால் DLS முறை மூலம் முடிவு தீர்மானிக்க முடியும். அதற்கு முன்பே போட்டி முழுமையாக கைவிடப்பட்டால் மட்டுமே இரு அணிகளுக்கும் தங்கப் பதக்கம் பகிரப்படும்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles