15,000 ரன்கள் கடந்தும் பெருமை இல்லை… என் மனதில் இருந்தது இதுதான்.. விராட் கோலி உணர்ச்சி பேட்டி

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, ஒருநாள் கிரிக்கெட்டில் 15,000 ரன்களை கடந்துள்ளார். இதன்மூலம் இந்த மைல்கல்லை அதிவேகமாக எட்டிய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இந்த சாதனைக்குப் பிறகு பேசிய அவரிடம், தொடர்ந்து இவ்வளவு சிறப்பாக செயல்படுவதற்கான காரணம் குறித்தும், இந்த சாதனை குறித்தும் கேட்கப்பட்டது.

- Advertisement -

அதற்கு பதிலளித்த கோலி, தனது கவனம் எப்போதுமே தனிப்பட்ட மைல்கற்கள் மீது இருந்ததில்லை என்று கூறினார். போட்டியின் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, அணிக்காக செய்ய வேண்டிய வேலையைச் செய்வதில்தான் தனது கவனம் இருப்பதாக தெரிவித்தார். மேலும், நீண்ட காலமாக இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்ததற்கு தான் மிகவும் நன்றியுடன் இருப்பதாகவும், உடல் தகுதியுடன் இருப்பதும் ஆட்டத்தைப் புரிந்துகொள்வதும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட உதவுவதாகவும் கூறினார்.

- Advertisement -

இதுகுறித்து கோலி கூறும்போது, “இந்த மைல்கற்களில் எனது கவனம் ஒருபோதும் இருந்ததில்லை. சூழ்நிலையைப் புரிந்துகொண்டு அணிக்காக என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வதுதான் முக்கியம். சாதனைகள் தானாகவே வந்து சேரும். இவ்வளவு காலம் இந்தியாவுக்காக விளையாட முடிந்ததற்கு நான் மிகவும் நன்றியுடன் இருக்கிறேன். அதனால் தலையைத் தாழ்த்திக்கொண்டு தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும்” என்று கூறினார். மேலும், சிறுவயதில் தொடங்கிய தனது பயணத்தை நினைத்துப் பார்க்கும்போது நன்றியுணர்வு ஏற்படுவதாகவும், இந்தியாவுக்காக விளையாடும் ஒவ்வொரு தருணத்தையும் ரசிப்பதாக கோலி கூறி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles