வைபவால் நான் நிம்மதியா கண்மூடி தூங்க முடியல.. அது எனக்கு ரொம்ப கடினமான இரவு – கௌதம் கம்பீர் விளக்கம்

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த சூழ்நிலையில் அதற்கு முன்னதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆன கௌதம் கம்பீர், தான் இந்திய அணிக்கு பயிற்சியாளராக பொறுப்பேற்ற இத்தனை ஆண்டுகளில் தான் தூங்காத கடினமான இரவு ஒன்று குறித்து விவரித்துப் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக முதல் டி20 போட்டியில் தோல்வியடைந்த பிறகு, தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் ஓரம் கட்டப்பட்டு அவருக்கு பதிலாக வைபவ் சூரியபன்சி சேர்க்கப்பட்டார். இது குறித்து முதன்முதலாக மனம் திறந்து பேசி இருக்கும் கௌதம் கம்பீர் அன்றைய என் பயிற்சியாளர் வாழ்க்கையில் மிகவும் கடினமான இரவாக இருந்ததாக சில விஷயங்களை விவரித்து இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் பேசியதாவது ” சஞ்சு கடந்த டி20 உலக கோப்பையில் தொடர் நாயகன் விருதை வென்ற வீரர். அவரை இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சூழ்நிலை கருதி அவருக்கு விளையாட இடம் கொடுக்காமல் போனது மிகவும் கடினமான விஷயமாகும். அன்றைய இரவு என்னால் நிம்மதியாக கண் மூடி உறங்க முடியவில்லை. இருப்பினும் சூழ்நிலையை அவருக்கு விரிவாக கூறினேன். மேலும் அவர் பக்குவப்பட்ட வீரராக இருந்ததால், நன்றாக புரிந்து கொண்டார் அதற்குப் பிறகு மீண்டும் ஃபார்முக்குத் திரும்பி மீண்டும் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles