இன்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்ய இருக்கிறது. மேலும் இந்த போட்டி குறித்து ருதுராஜ் பேசி உள்ளார்.
மேலும் இந்த போட்டியில் குஜராத் அணியில் அர்ஷத் கான் பிரசித் கிருஷ்ணா இடத்தில் இடம் பெறுகிறார். சிஎஸ்கே அணியில் சப்ராஸ் கான் இடத்தில் உர்வில் படேல் விளையாடுகிறார்.
இந்தப் போட்டி குறித்து பேசி உள்ள ருதுராஜ் கூறும்போது “இந்த ஆடுகளம் கொஞ்சம் டிரையாக காணப்படுகிறது. எனவே நாங்கள் முதலில் பேட்டிங் செய்து நல்ல ஸ்கோர் எடுத்து அதை டிபன்ட் செய்வதில் எந்த பிரச்சனையும் எங்களுக்கு இல்லை. எங்களுடைய நம்பிக்கை இப்பொழுது மிகவும் சிறப்பாக இருக்கிறது”
“நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சிறப்பாக மாறிக்கொண்டே வருகிறோம். இன்னும் சில பகுதிகளில் முன்னேற வேண்டும். எனக்கும் சில நல்ல தொடக்கங்கள் கிடைக்கிறது விரைவில் பெரிய ரன் வரும்” என்று கூறியுள்ளார்.

