இன்று ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல் அணிக்கு எதிரான படு தீவிர பரபரப்பான போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் கில் 45 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார்.
இதைத் தொடர்ந்து விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு கேஎல்.ராகுல் சிறப்பாக விளையாடி 52 பந்துகளில் 92 ரன்கள் எடுத்து போட்டியை வெற்றிக்கு நெருக்கி கடைசி கட்டத்தில் எடுத்துக் கொண்டு வந்தார்.
இந்த நிலையில் டேவிட் மில்லர் மற்றும் குல்தீப் யாதவ் களத்தில் இருக்க வெற்றிக்கு இரண்டு பந்துகளில் இரண்டு ரன்கள் தேவைப்பட்டது. அப்போது டேவிட் மில்லர் ஐந்தாவது பந்தில் சிங்கிள் எடுக்கும் வாய்ப்பை மறுத்து நின்று விட்டார். இந்த நிலையில் கடைசி பந்தையும் டேவிட் மில்லர் அடிக்காமல் விட்டு ரன் ஓட, எதிர்முனையில் ஓடிய குல்தீப் யாதவ் பட்லரால் ரன் அவுட் செய்யப்பட்டார். இதனால் பரபரப்பான போட்டியில் டெல்லி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
டேவிட் மில்லர் ஐந்தாவது பந்தில் ஒரு ரன் எடுத்திருந்தால் போட்டி அப்போதே டிரா ஆகி இருக்கும். அடுத்து குல்தீப் யாதவ் கடைசிப்பந்தில் சிங்கிள் எடுக்க முடிந்திருந்தால் போட்டியில் வெற்றியும் கிடைத்திருக்க வாய்ப்பிருந்தது. ஆனால் டேவிட் மில்லர் கொஞ்சமும் ஆட்ட விழிப்புணர்வு இல்லாமல் தவறு செய்ததை ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

