சிஎஸ்கே ஜடேஜாவுக்கு செஞ்சது சரியே கிடையாது.. அதனாலதான் ஊர் போய் அடி வாங்குறாங்க – மைக்கேல் வாகன் கருத்து

இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு டிரேடிங் முறையில் ரவீந்திர ஜடேஜாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சிஎஸ்கே அணி நிர்வாகம் கொடுத்து இருக்கக் கூடாது என மைக்கேல் வாகன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

தற்போது சிஎஸ்கே அணியின் லோயர் மிடில் ஆர்டர் அனுபவம் மற்ற வீரர்களால் நிரம்பி இருக்கிறது. இவர்களால் போட்டியை வெற்றிகரமாக முடிப்பது மிகவும் கடினம். ஜடேஜா பேட்டிங்கில் குஜராத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 2023 ஆம் ஆண்டு தனியாக நின்று வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

மேலும் ஜடேஜா ஒரு ஆல் ரவுண்டராக தனது பந்துவீச்சில் பலமுறை திருப்புமுனைகளை சிஎஸ்கே அணிக்கு பெற்றுக் கொடுத்திருக்கிறார். இப்படிப்பட்டவரை விட்டிருக்கக் கூடாது என்று இப்போது சிஎஸ்கே உணர ஆரம்பித்துள்ளது.

- Advertisement -

இது குறித்து மைக்கேல் வாகன் பேசும் பொழுது ” ரவீந்திர ஜடேஜா அனுபவம் வாய்ந்த ஒரு வீரர். நீங்கள் இளம் வீரர்களை வளர்க்க விரும்பினால் அனுபவமும் அடிப்படையாக இருக்க வேண்டும். அவர் இருந்திருந்தால் பந்துவீச்சில் அவரது அனுபவத்தால் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்க முடியும். சிஎஸ்கே அவரை ராஜஸ்தானுக்கு விட்டுக் கொடுத்து இருக்கக் கூடாது” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles