தற்போது நடைபெற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் தற்போது பெங்களூர் அணி பேட்டிங் செய்து விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீச சிஎஸ்கே தீர்மானித்த நிலையில் தொடக்கத்தில் சென்னை அணியின் பந்துவீச்சு ஓரளவு நன்றாக இருந்தது.
அதற்குப் பிறகு தனது கியரை மாற்றிய ஆர்சிபி சென்னை அணியின் பவுலிங் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. சற்று முன்பு வரை அந்த அணி 17.2 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் குவித்து விளையாடிக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் இதற்கு முன்பாக சென்னை அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போதைய கேப்டன் ருத்ராட்ச் குறித்த சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
இதுகுறித்து அஸ்வின் பேசும்போது “ஒரு விஷயத்தை நாம் இப்போது நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். ருத்ராஜ் சிஎஸ்கே அணிக்கு புதிய கேப்டன். மேலும் அவர் போட்டியின் போது மற்ற வீரர்களுடன் அதிகமாக பேச வேண்டும் என்று நினைக்கிறேன். அப்போதுதான் மற்ற வீரர்கள் என்ன செய்ய வேண்டும் தங்களது பணி என்ன என்பது குறித்து விவாதிக்க முடியும். அதுமட்டுமல்லாமல் தற்போதைய கேப்டன் புதியவர். எனவே அவருக்கு நாம் போதிய நேரம் கொடுப்பது மட்டுமல்லாமல் ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதும் அவசியம்” என்று நான் நினைக்கிறேன் என அஸ்வின் பேசியிருக்கிறார்.

