எதிரணி வீரர்கள் உங்க பலவீனத்தை புடிச்சிட்டாங்க அபிஷேக்.. இனி இதை தயவு செஞ்சு ட்ரை பண்ணாதீங்க – இர்பான் பதான் எச்சரிக்கை

t20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணை தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இந்த சூழ்நிலையில் அடுத்த சுற்றில் முதல் போட்டியாக தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரரான அபிஷேக் சர்மா இன்னும் இந்த தொடரில் தனது ரன் கணக்கை துவங்காமல் உள்ளார்.

- Advertisement -

மூன்று போட்டிகளிலும் டக் அவுட் முறையில் ஆட்டம் இழந்து வரும் அவர், அடுத்த சுற்றில் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார். மேலும் அவரது பலவீனத்தை கடந்த இரண்டு போட்டிகளாக எதிரணி வீரர்கள் சரியாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான இர்பான் பதான், அவருக்கு எச்சரிக்கை அளிக்கும் விதமாக சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “முதல் போட்டியில் சரியாக இல்லை என்றாலும் கடைசி இரண்டு போட்டிகளில் அவருடைய பேட்டர்ன் தெளிவாக தெரிகிறது. ஆஃப் ஸ்பின்னர்கள் ரூம் கொடுக்காமல் ஸ்டம்ப் லைனில் பந்து வீசுகின்றனர். இதனால் அவர் அக்ராஸ் ஆட முயன்று என்று ஆட்டம் இழந்து வெளியேறுகிறார். ஆப் ஸ்பின்னர்கள் வரும்போது ரூம் கொடுக்க மாட்டார்கள் என்று எதிர்பாருங்கள். அதற்கு ஏற்றவாறு நேராக அடித்து ஆட முயற்சி செய்யுங்கள் இல்லையென்றால் சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்யுங்கள்” என்று பேசியிருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles