நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் ஜிம்பாப்வே அணி ஒரு போட்டியில் கூட தோற்காமல் முதல் சுற்றில் இருந்து இரண்டாவது சுற்று முன்னேறி உள்ளது. அந்த அணி தங்களது முதல் போட்டியில் வலிமையான ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அபார வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று சொந்த மண்ணில் விளையாடிய இலங்கை அணியை சிறப்பாக விளையாடி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
மேலும் இரண்டாவது சுற்றில் இந்தியா இடம்பெற்று இருக்கும் பிரிவில் ஜிம்பாப்வே அணி இடம்பெற்று இருக்கிறது. இந்திய அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜிம்பாப்வே அணி விளையாட இருப்பது. தற்போது சிறப்பாக ஜிம்பாப்வே அணி விளையாடி வருகின்ற காரணத்தினால் அவர்களை எந்த ஒரு அணியும் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. அவர்கள் மைதானத்தின் சூழலை நன்கு புரிந்து அதற்கு ஏற்ற வகையில் விளையாடுகிறார்கள். அவசரப்பட்டு ஆடி விக்கெட்டை கொடுக்காமல் இருப்பது அவர்களுடைய பலமாக இருக்கிறது.
இதுகுறித்து ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராஸா பேசும்பொழுது “நாங்கள் எங்களுடைய வலிமையையும் சூழலையும் புரிந்து கொண்டு விளையாட முயற்சி செய்கிறோம். தற்போது நாங்கள் நல்ல முறையில் விளையாடி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி வந்திருக்கிறோம். எங்களுக்கு இரண்டாவது சுற்றில் மூன்று போட்டிகள் இருக்கின்றன. இந்திய அணிக்கு எதிராகவும் விளையாடுகிறோம். இதில் என்ன நடக்கும் என்று யாருக்குமே தெரியாது. ஆனால் எங்கள் ட்ரெஸ்ஸிங் ரூமில் நம்பிக்கை சிறப்பாக இருக்கிறது. எனவே எங்களால் எது வேண்டுமானாலும் செய்ய முடியும்” என்று கூறி இருக்கிறார்.

