நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான அணி மிகச் சிறப்பான முறையில் போராடி தோல்வி அடைந்திருக்கிறது. டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இரண்டு முறை சூப்பர் ஓவர்களுக்கு சென்ற போட்டியாக இந்த போட்டி அமைந்திருக்கிறது. உலகெங்கும் இருந்து வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணியை விட ஆப்கானிஸ்தான் அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்திய முன்னாள் வீரர்கள் சச்சின் மற்றும் யுவராஜ் இருவரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு தங்கள் வாழ்த்தை தெரிவித்திருக்கிறார்கள்.
யுவராஜ் சிங் கூறும்போது “குர்பாஸ் நீ இந்த தோல்விக்காக சோர்வடைய வேண்டாம். நீ உன்னுடைய நாட்டுக்காக அணிக்காக கடைசிவரையில் அருமையாக போராடினாய். உன்னை மாதிரியான வீரர்களைத்தான் மேஜிசியன் என்று சொல்வார்கள். வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணியை விட நீ போராடி தோல்வி அடைந்ததற்கு தான் மதிப்பு அதிகம். இதைப் பற்றி தான் அதிகமாக எல்லோரும் பேசுவார்கள்” என்று கூறியிருக்கிறார்.
சச்சின் டெண்டுல்கர் பாராட்டும் போது “ஒரு போட்டியில் இரண்டு சூப்பர் ஓவர் என்பது சலிப்பே வராத ஒரு விஷயம். எவ்வளவு ஒரு அருமையான போட்டியாக இது அமைந்தது. வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா அணிக்கு என்னுடைய வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன். அதே சமயத்தில் இப்படிப்பட்ட ஒரு போட்டியை அமைதியாக இருந்து கொண்டு சென்று முடிக்க மிகப்பெரிய மன உறுதி தேவை. நான் சொல்கிறேன் இந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆபத்தான அணியாக மாறுகின்ற திறமை இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

