வாழ்க்கையில் எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.. தோனி அட்வைஸ்

ஐபிஎல் தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில், நட்சத்திர வீரர்கள் அனைவரும் விளம்பரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனான தோனிக்கு இது கடைசி சீசனாகவே பார்க்கப்படுகிறது. இதனால் சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டத்துடன் தோனிக்கு ஃபேர்வெல் கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

- Advertisement -

ஏனென்றால் 2019ம் ஆண்டே சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதை நிறுத்திய தோனி, அதன்பின் ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். 43 வயதாகிவிட்டதால், அவருக்கு இது இதுவே கடைசி சீசனாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தோனி இந்த சீசனில் அன்கேப்ட் வீரராக தக்க வைக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம்

- Advertisement -

இந்த நிலையில் மும்பையில் நடைபெற்ற விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் தோனி மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியின் தோனி பேசும் போது, வாழ்க்கையில் எந்த நேரத்தில் எது சரி, எதை செய்ய வேண்டும் என்ற தெளிவு நமக்கு இஉர்க்க வேண்டும். நான் இந்திய அணிக்காக ஆடிய போது, கிரிக்கெட்டுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்தேன்.

அதனை விடுத்து வேறு எந்த விஷயத்திலும் அதிக கவனம் கொடுத்ததில்லை. என்ன நேரத்திற்கு தூங்குகிறேன்? எந்த நேரத்தில் எழுகிறேன்? அது என் கிரிக்கெட்டில் என்ன தாக்கம் செலுத்துகிறது என்பதிலேயே கவனம் கொண்டிருந்தேன். நட்பு, கொண்டாட்டம் உள்ளிட்டவை பின்னர் பார்த்து கொள்ளலாம். அதற்கு வாழ்வின் பிற்பகுதி இருக்கிறது.

- Advertisement -

சரியான நேரம் எது?

அனைத்து விஷயங்களை செய்யவும் சரியான நேரம் என்று ஒன்று இருக்கிறது. அதனை மட்டும் சரியாக கணித்து தெரிந்து கொண்டால், உங்களின் சிறந்த விஷயமாக அது இருக்கும். ஒரு கிரிக்கெட்டராக இந்திய அணிக்கு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். இதனை முன்பும் கூட சொல்லி இருக்கிறேன். 

ஏனென்றால் யாருக்கும் அவ்வளவு எளிதாக இந்திய அணிக்கு விளையாடும் வாய்ப்பு கிடைப்பதில்லை. ஒரு கிரிக்கெட் வீரராக பெரிய அரங்கில் விளையாடும் போது, சுற்றுப்பயணம் செய்யும் போது, நாட்டை பெருமைப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். அதனால் எப்போது எனக்கு நாடே முதன்மையானது என்று தெரிவித்தார். தோனியின் பேச்சு சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் பகிரப்பட்டு வருகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles