இவரையா கழட்டி விட்டீங்க… இந்த தமிழக வீரர் ஐபிஎல் ஏலத்தில் 13 கோடி போவார்.. ரவிச்சந்திரன் அஸ்வின் மாஸ் கணிப்பு.!

2024 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடருக்கான ஏலம் வருகின்ற டிசம்பர் மாதம் 19ஆம் தேதி துபாயில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்திற்காக ஐபிஎல் போட்டியில் இங்கு வரும் 10 அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

- Advertisement -

அனைத்து அணிகளின் தக்கவைத்துக் கொள்ளப்படும் வீரர்களின் இறுதி கட்டப்பட்டியல் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது எந்த வீரரை ஏலத்தில் எடுக்கலாம் என்பது திட்டமிடலில் ஐபிஎல் போட்டிகளில் பங்கு பெறும் அணிகள் கவனம் செலுத்தி வருகிறது. ஆர்ச்சர் மற்றும் பென் ஸ்போக்ஸ் போன்ற தலைசிறந்த வீரர்கள் கழற்றிவிடப்பட்டிருக்கும் நிலையில் ஐபிஎல் ஏலம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின் 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலம் பற்றிய தனது கருத்துக்களை யூடியூப் சேனலில் பகிர்ந்திருக்கிறார். இது தொடர்பாக பேசி இருக்கும் அவர் தமிழக வீரருக்காக குஜராத் மற்றும் சென்னை அணிகள் மிகப்பெரிய ஏல யுத்தத்தில் ஈடுபடும் எனவும் தெரிவித்துள்ளார். அவரது பேட்டியும் ஐபிஎல் ஏலத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறது.

- Advertisement -

குஜராத் டைட்டன்ஸ் அணி ஹர்த்திக் பாண்டியாவை டிரேடிங் முறையில் மும்பை அணிக்கு கொடுத்து இருக்கிறது. இதனால் அந்த அணியில் அதிரடி வீரர் மற்றும் பினிஷருக்கான தேவை உருவாகியுள்ளது. இந்த வருட ஏலத்தில் குஜராத் அணியினர் ஒரு பினிஷரை தங்கள் அணிக்கு எடுக்க முயற்சிப்பார்கள். இதனால் தமிழக வீரர் ஒருவருக்கு அதிர்ஷ்டம் அடிக்க போகிறது என அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சேனலில் விரிவாக பேசியிருக்கிறார் அஸ்வின்.

இது தொடர்பாக விரிவாக பேசியிருக்கும் அஸ்வின் ” தமிழக அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷாருக்கான் இந்த ஒரு ஐபிஎல் ஏலத்தில் கவனிக்கப்படக்கூடிய வீரராக இருப்பார். கடந்த முறை பஞ்சாப் கிங்ஸ் அணியினர் அவரை 9 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தனர். அந்த அணிக்காக பினிஷர் நூலில் விளையாடிய ஷாருக்கான் 14 போட்டிகளில் விளையாடிய 156 ரன்கள் எடுத்திருக்கிறார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 165. இந்த முறை பஞ்சாப் அணி அவரை விடுவித்து இருக்கிறது. அதுவும் ஒரு நல்ல முடிவு தான். ஏலத்தில் குறைந்த விலைக்கு வந்தால் அவரை எடுக்கலாம் என்ற யோசனையில் விட்டிருக்கலாம்.

- Advertisement -

எனினும் ஷாருக்கான் எலத்தில் எடுப்பதற்கு சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே மிகப்பெரிய யுத்தமே நடக்கும் என்று நினைக்கிறேன் . குஜராத் டைட்டன்ஸ் அணியினர் ஹர்திக் பாண்டியாவை வெளியேற்றி இருப்பதால் அந்த அணியினருக்கு ஒரு பினிஷர் மற்றும் பவர் ஹிட்டர் தேவைப்படுகிறார். மேலும் ஷாருக் கான் கடந்த ஐபிஎல் போட்டிகளின் மூலம் தனது திறமை என்ன என்று நிரூபித்துள்ளார். கடந்த ஏலத்தில் பஞ்சாப் அணி அவரை ஒன்பது கோடி ரூபாய்க்கு வாங்கி இருக்கிறது. இந்த முறை 12 முதல் 13 கோடி ரூபாய் வரை அவரை வாங்க அணிகள் போட்டி போடும் என தெரிவித்திருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய அஸ்வின் ” சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஷாருக்கான் வாங்க ஏலத்தில் தீவிரம் காட்டலாம். ஏனெனில் நீண்ட நாட்களாக தமிழக வீரர் ஒருவர் இல்லாமல் சென்னை அணி இருக்கிறது. இந்த முறை ஷாருக்கான் போன்ற ஒரு வீரர் ஏலத்தில் வருவதால் சென்னை அணியும் அவரை வாங்குவதற்கு தீவிரமாக முயற்சி செய்யும். இதனால்தான் அவருக்கு 13 கோடி ரூபாய் வரை ஏலம் இருக்கும் என தெரிவித்தேன்” எனக் கூறி முடித்திருக்கிறார் அஸ்வின்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles