நீங்க என்னை புறக்கணிக்கலாம்.. ஆனா என் வழி,! தனி வழி.! இந்திய அணியில் சேர்க்கப்படாதது குறித்து சஞ்சு சாம்சன் பதிலடி.!

இந்திய அணி ஆஸ்திரேலிய விற்கு எதிராக மூன்று போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட இருக்கிறது. இந்தப் போட்டிகள் வருகின்ற 22 ஆம் தேதி மொகாலியில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியுடன் துவங்க இருக்கின்றன. இதற்கான இந்திய அணியை இரு தினங்களுக்கு முன்பு தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் வெளியிட்டார்.

- Advertisement -

மூன்று போட்டிகளைக் கொண்ட இந்த ஒரு நாள் போட்டி தொடருக்காக இந்திய தேர்வாளர்கள் இரண்டு வெவ்வேறு அணிகளை அறிவித்திருக்கின்றனர். மேலும் முதல் இரண்டு போட்டிகளில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஆஸ்திரேலியா அணியுடன் விளையாட இருக்கும் இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

ரோகித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு முதல் இரண்டு போட்டிகளில் ஓய்வு வழங்கப்பட்டு இருப்பதால் கேஎல்.ராகுல் கேப்டனாகவும் ரவீந்திர ஜடேஜா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். முதல் இரண்டு போட்டிகளில் விளையாடும் இந்திய அணியில் ஆசியக் கோப்பையில் இடம் பெற்ற வாஷிங்டன் சுந்தர் மற்றும் திலக் வர்மா ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -

15 பேர் கொண்ட இந்த இரண்டு அணிகளிலும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் இடம் பெறவில்லை. இது கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சஞ்சு சாம்சன் இந்திய அணியில் இடம் பெறாததற்கு ரசிகர்கள் தங்கள் சமூக வலைதளங்களின் மூலமாக விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர்.

கடைசியாக வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தின் போது மூன்றாவது ஒருநாள் போட்டியில் 51 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 13 சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கும் அவர் மூன்று அரை சதங்களுடன் 390 ரன்கள் சேர்த்திருக்கிறார். இவரது சராசரி 55.71 ஆகும். இவர் அணியில் சேர்க்கப்படாமல் சமீபகாலமாக ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வரும் சூரியகுமார் யாதவ் இந்திய அணியில் இடம் பெற்று இருக்கிறார்.

- Advertisement -

இதுவும் விவாதத்திற்கு உள்ளாகி இருக்கிறது. 27 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் சூரியகுமார் யாதவ் 531 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில் இரண்டு அரை சதங்கள் அடங்கும். மேலும் இவரது ஒரு நாள் போட்டியின் சராசரி 24.41 ஆக இருக்கிறது. தொடர்ந்து ஒரு நாள் போட்டிகளில் சராசரிக்கும் குறைவான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூரியகுமார் யாதவை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக செஞ்சு சாம்சனை சேர்த்திருக்கலாம் என்ற கருத்தும் வலுத்து வருகிறது.

இந்நிலையில் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாதது குறித்து தனது மவுனத்தை கலைத்திருக்கிறார் சஞ்சு சாம்சன். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் அவர் ” எது நடந்ததோ அதுதான்.! நான் தொடர்ந்து முன்னோக்கி செல்வதை தேர்வு செய்து இருக்கிறேன்” என பதிவிட்டு இருக்கிறார். இந்த முறையும் வாய்ப்பு மறுக்கப்பட்டாலும் தொடர்ந்து முயற்சிகள் செய்து இந்திய அணியில் மீண்டும் இடம்பெறுவேன் என்பதை மறைமுகமாக சஞ்சு சாம்சன் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles