முதல் சிஎஸ்கே மேட்ச்ல இத பாக்க போறீங்க.. வரலாறையே மாத்த போறோம் – மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் பேட்டி

பழைய முகங்களுடன் எங்களின் புதிய சவால்களை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் – மும்பை அணியின் பயிற்சியாளர்

- Advertisement -

கடந்த சீசனில் புள்ளி பட்டியலில் கடைசி இடம், அணியின் புதிய கேப்டன் சொந்த அணி ரசிகர்களால் சொந்த மைதானத்தில் மிகவும் மோசமாக நடத்த பட்டது, இப்போது புதிய சீசனில் ஜஸ்பிரித் பும்ரா முதல் சில போட்டிகளுக்கு இல்லாதது மற்றும் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் பங்கேற்க முடியாத சூழ்நிலை என்று, கடந்த ஆண்டில் இருந்து இந்த ஆண்டு வரை மும்பை அணிக்கு அடி மேல் அடி விழுந்து கொண்டிருக்கிறது. இந்த விசயங்கள் அனைத்தையும் எவ்வாறு சரி செய்யப் போகிறோம் என்று அணியின் பயிற்சியாளர் ஜெயவர்த்தனே கூறியுள்ளார்.

- Advertisement -

ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 2020 க்குப் பிறகு கோப்பையயை வெல்லும் நினைப்பில் உள்ளனர். இதற்காக நடந்து முடிந்த மெகா ஏலத்தில் ஐபிஎல் 2020 இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகனாக இருந்த ட்ரெண்ட் போல்ட்டை ஏலத்தில் எடுத்தும் மற்றும் அணியின் பயிற்சியாளராக ஜெயவர்த்தனே நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது . இவர் 2017 முதல் 2022 வரை அணியின் பயிற்சியாளராக இருந்து மூன்று முறை கோப்பையை வென்று கொடுத்தவர்.

- Advertisement -

இவருக்குப் பின் அணியின் தலைமை பயிற்சிளர் பொறுப்பை ஏற்ற பவுச்சர் பதவி காலத்தில் மும்பை அணியின் செயல்பாடுகள் குறிப்பிடத்தக்க அளவில் இல்லை. இதனால் இவர் மீது அதிருப்தி அடைந்த மும்பை அணியின் நிர்வாகம், அவர்களின் வெற்றிகளின் தாரக மந்திரமான முன்னாள் மும்பை அணியின் வீரரும் மும்பை அணையின் பயிற்சியாளருமான ஜெயவர்த்தனேவை அணியின் பயிற்சியாளராக நியமித்து உள்ளனர்.

இந்த வருடத்திற்கான திட்டங்கள் மற்றும் அணியின் தற்போதைய நிலை குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெயவர்த்தனே கூறும் போது “கடந்த சீசன் எங்களுக்கு சில சவால்களை ஏற்படுத்தியது, ஆனால் தற்பொழுது நடந்து முடிந்த மெகா ஏலம் , மேலும் நிறைய மாற்றங்கள் நடந்துள்ளன.இதன் தன் மூலம், எங்களின் விதியைத் தொடங்கவும் வண்ணம் தீட்டவும் ஒரு புதிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அனுபவ மற்றும் இளம் வீரர்களை கொண்ட நாங்கள் வரும் தொடரில் எப்படி வெற்றி பெற வேண்டும் இன்றைய திட்டம் வகுத்துக் கொடுக்க எங்களுக்கு ஒரு குழு உள்ளது ” என்றும்

- Advertisement -

மேலும் அவர் கூறும் போது
“அணியில் புதிதாக இணைந்த வீரர்களையும்,சில பழைய முகங்களையும் இணைத்து, ஒரு குழுவாக நாங்கள் நன்றாக எங்களை நன்றாக தயார் செய்து, எங்கள் பலத்தைப் புரிந்துகொண்டு, நல்ல தொடக்கத்தைப் பெறுவோம். பல ஆண்டுகளாக முதல் போட்டியில் வெற்றி பெறாத வரலாற்றை சரி செய்ய முயற்சிப்பது எங்களுக்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது. அதை இந்த முறை சரி செய்வோம் என்று” மும்பை அணியின் பயிற்சியாளர் ஜெயவர்த்தனே கூறினார்.

(மும்பை அணி இந்த ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை அணியை சென்னை மைதானத்தில் எதிர்த்து விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது)

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles