பார்ட்டி பண்றது, குடி, பொண்ணுங்க என அபிஷேக் ஷர்மா ரொம்ப கெட்டுப் போயிருந்தார்.. அவர மாற்றினது யுவராஜ் சிங் தான் – வெளியான உண்மை

கடந்த சில ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட்டில் புதிய நட்சத்திரமாக ஜொலிக்கிறார் அபிஷேக் ஷர்மா. குறிப்பாக, 2024 ஐபிஎல் சீசனில் அவர் மின்னல் வேகத்தில் 484 ரன்கள் குவித்து, 204.21 என்ற அசுர வேக ஸ்ட்ரைக் ரேட்டுடன் 42 சிக்ஸர்களை விளாசி, ஒரு இந்திய வீரராக புதிய சாதனை படைத்தார். அதே வேகத்தில் இந்திய அணியில் 2 அதிரடி சதமும் விளாசினார்.

- Advertisement -

நடப்பு 2025 ஐபிஎல்லில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக 55 பந்துகளில் 141 ரன்கள் (14 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள்) அடித்து, ஐபிஎல்லில் ஒரு இந்தியரின் அதிகபட்ச ஸ்கோரைப் பதிவு செய்தார். இந்த ஆண்டு பிசிசிஐ-யின் கிரேடு C ஒப்பந்தத்தைப் பெற்று, தனது முதல் மத்திய ஒப்பந்தத்தை உறுதி செய்து கேரியரில் அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்துள்ளார்.

- Advertisement -

இந்த 24 வயது வீரரின் பயணம் எளிதாக இல்லை. இந்திய அணியின் முன்னாள் நட்சத்திரம் யுவராஜ் சிங், அபிஷேக் பதின்பருவத்தில் இருந்தபோது அவரை வழிநடத்தினார். பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தின் வயதுக்குட்பட்ட போட்டிகளில் அவரது திறமையைக் கண்டறிந்த யுவராஜ், அந்த மாநில கிரிக்கெட் நிர்வாகம் அபிஷேக்கை பந்துவீச்சாளராக பதிவு செய்தபோது, 24 சதங்களை அடித்திருந்த அபிஷேகின் பேட்டிங் திறனை வெளிக்கொணர்ந்தார்.

- Advertisement -

பின்னர் ஒரு கட்டாதில் அபிஷேக் ஷர்மா, இரவு நேரப் பார்ட்டி, குடிப் பழக்கம், பெண்கள் என வேறொரு பாதையில் சீரழியத் துவங்கினார். அவரை அவரது பெற்றோர்களால் கூட கட்டுப்படுத்த இயலவில்லை. பிறகு அபிஷேக் சர்மாவை பார்த்துக் கொள்ளும் முழு பொறுப்பையும் யுவராஜ் சிங் கையில் எடுத்ததாக யோக்ராஜ் சிங் கூறியுள்ளார். மேலும், ” ஒரு நாள் யுவராஜ், ‘ எங்கு இருக்கிறாய் ? மணி 9 ஆகிறது. போய்த் தூங்கு ” என பலமாகக் கத்தினார் எனவும் குறிப்பிட்டுள்ளார் யோக்ராஜ் சிங்.

அன்றில் இருந்து, தொடர்ந்து காலை 5 மணிக்கு அபிஷேக் சர்மாவுக்கு கால் செய்து எழுப்பி விட்டதும் யுவராஜ் தன. யுவராஜின் ஒழுக்கமான வழிகாட்டுதலால், அபிஷேக் இன்று வைரமாக ஜொலிக்கிறார். இந்திய அணியில் தொடர்ந்து மிரட்டும் அவர், இன்னும் பல உயரங்களைத் தொடுவார் என்பது உறுதி.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles