இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி முடித்த பிறகு அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட உள்ளது.
இந்த நிலையில் ஏற்கனவே சாம்பியன்ஸ் டிராபி அணியில் இருந்த நீக்கப்பட்ட ஜெய்ஷ்வாலுக்கு மற்றொரு சோகமான விஷயம் நடைபெற்றிருக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில் அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட உள்ளது. இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் வாய்ப்பு பெற்ற ஜெய்ஸ்வால் அதற்குப் பிறகு வாய்ப்பு பெறவில்லை. இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா திரும்ப பார்முக்கு வந்ததால் அவருக்கு அதற்குப் பிறகு இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட உள்ள இறுதி இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது, ஜெய்ஸ்வால் அதில் இருந்தும் நீக்கப்பட்டார். ஏனெனில் மாயாஜால சுழற் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி வாய்ப்பு பெற்றதால் ஜெய்ஸ்வாலுக்கு இடமில்லாமல் போனது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் அவர் ரஞ்சி டிராபி தொடரில் மும்பை அணிக்காக களம் இறங்க முடிவு செய்திருந்தார்.
மும்பை அணிக்காக களமிறங்க முடிவு செய்து அதற்கான பயிற்சியில் ஜெய்ஸ்வால் ஈடுபட்டு வந்தார். இதற்காக அவர் இன்று காலையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அவரது கணுக்காலில் சற்று வலி உண்டாகி இருக்கிறது. அதாவது கணுக்காலில் ஏற்பட்டிருந்த அவரது பழைய காயம் தற்போது வலியை உண்டாக்கி இருக்கிறது. இந்த நிலையில் அவர் மும்பை மாநில அணியில் இருந்து தற்போது பெங்களூர் செல்ல இருக்கிறார். மேலும் சாம்பியன்ஸ் டிராபி ரிசர்வ் வீரர்களின் பட்டியலில் இருந்தும் அவர் வெளியேறலாம் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க:ஐபிஎல் தொடரின் 2வது நாளிலேயே எல்-கிளாசிக்கோ ஆட்டம்.. கண்டத்தில் சிக்கிய மும்பை அணி.. எந்த மைதானத்தில் தெரியுமா?
இது சம்பந்தமாக வெளிவந்த அறிக்கையில் ஜெய் ஸ்வால் “கணக்காலில் ஏற்பட்ட வலியின் காரணமாக அவர் மும்பை அணிக்காக களம் இறங்க இருந்த ரஞ்சி போட்டியின் அரையறுதியில் இருந்து விலகுகிறார். இன்று பயிற்சிக்கு வந்த அவர், மும்பை அணியோடு இணைந்து பயிற்சி மேற்கொண்டிருந்த போது வலி இருப்பதாக உணர்ந்து வெளியேற முடிவு செய்து இருக்கிறார். மேலும் அவர் பெங்களூர் செல்ல தயாராக இருக்கிறார். மேலும் பெங்களூரில் உள்ள பிசிசிஐ எக்ஸலன்ஸ் அகாடமிக்கு செல்ல இருக்கிறார்” என்பது குறிப்பிடத்தக்கது.

