2023 ஆம் வருட பதிமூன்றாவது உலகக்கோப்பை தொடரில் முதல் அரை இறுதி போட்டி இன்று முடிவடைந்து இருக்கிறது. மும்பையில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
முன்னதாக இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 397 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஆகியோர் சதம் அடித்தனர். இதனைத் தொடர்ந்து முன்னோக்கி 98 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 327 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அந்த அணியின் டேரில் மிட்சல் மிகச் சிறப்பாக விளையாடி 134 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்திய அணியின் முகமது சமி 57 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலம் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
இந்தப் போட்டியிலும் ஐந்து விக்கீட்டுகளுக்கு மேல் எடுத்திருப்பதன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற உலக சாதனையையும் படைத்திருக்கிறார் முகமது சமி. நடப்பு உலக கோப்பையில் இதுவரை 6 போட்டிகளில் உரையாடி இருக்கும் அவர் 23 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து நடப்பு உலக கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர் பட்டியலிலும் முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறார் முகமது சமி.
சிறப்பான பந்துவீச்சின் காரணமாக இந்தப் போட்டியில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் முஹம்மது சமி. ஆட்டநாயகன் விருது பெற்ற பின் பேசிய அவர் ” வாய்ப்புக்காக காத்திருந்தேன். நான் வெள்ளை பந்து கிரிக்கெட் போட்டிகளில் நிச்சயமாக விளையாடியதில்லை. அது எனது மனதில் ஒரு குறையாகவே இருந்தது. எந்த மாதிரியான பந்துகள் வீசலாம் யார் கருவி சலாமா என்பது தொடர்பாக நாங்கள் ஆலோசித்தோம். புதிய பந்தில் எவ்வளவு விக்கெட் எடுக்க முடியுமோ அவ்வளவு விக்கெட்டுகள் எடுக்க முயற்சி செய்தேன். வில்லியம்சன் கேட்ஸை தவறவிட்டது மோசமான ஒன்று” என்று தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” பந்தின் வேகத்தை குறைத்து வீச முயற்சி செய்தேன். அவர்கள் அதிரடியாக ஆட முயன்றார்கள். இந்த நாள் ஒரு சான்ஸ் எடுத்து பார்த்தேன். ஆடுகளம் நன்றாக இருந்தது. பனிப்பொழிவு அவ்வளவாக இல்லை. ஆடுகளத்தில் பொருட்களை நன்கு வெட்டி சமன் செய்திருந்தார்கள். ஒருவேளை பனிப்பொழிவு அதிகமாக இருந்தால் நிலைமை மோசமாக இருக்கும்.
பனிப்பொழிவு இருக்கும்போது மெதுவான பந்துகளும் அடிப்பதற்கு ஏதுவாக இருந்திருக்கும். இதனால் வெற்றி பெறுவது கஷ்டமாகி இருக்கும். உலக கோப்பையின் இறுதி போட்டியில் விளையாடுவது சிறப்பான உணர்வு. 2015 மற்றும் 2019 உலக கோப்பைகளில் ஆயிரத்தி போட்டியில் தோல்வி அடைந்திருக்கிறோம். எனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள நினைத்தேன். உங்கள் அனைவருக்கும் மீண்டும் இது போன்ற ஒரு வாய்ப்பு எப்போது அமையும் என தெரியாது” என்று கூடி முடித்திருக்கிறார் முகமது சமி.

