3 வருடங்களுக்கு பிறகு odi மேட்ச்சை மிஸ் செய்த கோலி… 2வது ஒருநாள் போட்டியில் விளையாடுவாரா… சுப்மன் கில் விளக்கம்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 3 ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது ஒருநாள் போட்டி கட்டாக் நகரில் நடைபெற இருக்கிறது. முன்னதாக நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் துணை கேப்டன் கில்லின் அபாரமான ஆட்டம் மற்றும் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சு முதல் வெற்றியை இந்தியாவிற்கு பெற்று தந்தது.

- Advertisement -

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி முதல் ஒருநாள் போட்டியில் முழங்கால் காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார். இங்கிலாந்து அணி இந்த போட்டியை சிறப்பாக தொடங்கினாலும் ரவீந்திர ஜடேஜா, ஹர்சித் ராணா மற்றும் முகமது சமி ஆகியோரின் பந்துவீச்சில் 248 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து, இந்தியா துவக்கத்தில் 2 விக்கெட் இழந்தாலும் சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி வெற்றி பெற உதவினர். இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய கில் 87 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடி 58 ரன்கள் சேர்த்தார். அக்சர் பட்டேல் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

முதல் ஒருநாள் போட்டிக்கு முன்பாக தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வந்தார் விராட் கோலி. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத நிலையில் சாம்பியன் டிராபிக்கு முன்பாக விராட் கோலி இந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் போட்டி தொடங்குவதற்கு முன்பாக முழங்கால் காயத்தால் விராட் கோலி அணியில் இடம் பெறவில்லை என ரோகித் சர்மா தெரிவித்தார்.

இதனால் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் விராட் கோலி விளையாடுவாரா.? என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு ஏற்பட்டது. இந்நிலையில் விராட் கோலி இரண்டாவது ஒரு நாள் போட்டியில் விளையாடுவது குறித்து இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார். இது தொடர்பாக பேசிய கில், விராட் கோலி இரண்டாவது ஒருநாள் போட்டியில் நிச்சயமாக விளையாடுவார் என கூறினார். மேலும் விராட் கோலி நல்ல உடல் தகுதியுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

- Advertisement -

இது தொடர்பாக பேசிய கில் ” விராட் கோலி நல்ல நிலையில் இருக்கிறார். முதல் ஒருநாள் போட்டி தொடங்குவதற்கு முன் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். முதல் போட்டியில் விளையாடுவதாக இருந்தது. எனினும் மறுநாள் காலையில் தூங்கி எழுந்த போது விராட் கோலியின் முழங்காலில் வீக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வர இருக்கின்ற போட்டிகளை கருத்தில் கொண்டு அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டது எனக் கூறினார்.

மேலும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாட விராட் கோலி தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தனது துணை கேப்டன் பொறுப்பு குறித்து பேசிய அவர் ரோகித் சர்மா போட்டி குறித்த தனது கருத்துக்களை தயக்கமின்றி தன்னிடம் தெரிவிக்குமாறு கூறியதாகவும் தெரிவித்தார். மேலும் இந்திய அணியின் வீரர்கள் அனைவரும் நேர்மறையான சிந்தனையுடன் வர இருக்கின்ற போட்டிகளுக்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2022 ஆம் வருடம் இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்த போது மூன்றாவது ஒருநாள் போட்டியில் காயம் காரணமாக விராட் கோலி பங்கேற்கவில்லை. அதனைத் தொடர்ந்து தற்போது 3 வருடங்களுக்குப் பிறகு தற்போது காயம் காரணமாக ஒரு நாள் போட்டியை மிஸ் செய்திருக்கிறார் விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles