நடராஜனை ரூ.11 கோடி கொடுத்து வாங்கினோம்.. அவரை பெஞ்ச் செய்ய எங்களுக்கு ஆசையா.. புலம்பி தள்ளிய ஹேமங் பதானி

ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் மிகச்சிறப்பாக விளையாடிய டெல்லி அணி, 2வது பாதியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் பாதியில் 6 போட்டிகளில் 5ல் வென்று புள்ளிப் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் 2வது பாதியில் வெறும் 2 போட்டிகளில் மட்டுமே டெல்லி அணி வென்று பிளே ஆஃப் சுற்றுக்கான முன்னேறாமல் வெளியேறியது.

- Advertisement -

ஹேமங் பதானி விளக்கம்

டெல்லி அணியின் தோல்விக்கு நடராஜனை சரியாக பயன்படுத்தாததே காரணமாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் ரூ.10.75 கோடி கொடுத்து வாங்கப்பட்ட நடராஜன் வெறும் 2 போட்டிகளில் மட்டுமே சேர்க்கப்பட்டிருந்தார். இதனால் டெல்லி அணியின் பயிற்சியாளர் ஹேமங் பதானி மற்றும் கேப்டன் அக்சர் படேல் ஆகியோர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

- Advertisement -

இந்த சூழலில் நடராஜன் சேர்க்கப்படாததற்கான காரணம் பற்றி ஹேமங் பதான் விளக்கம் கொடுத்துள்ளார். டிஎன்பிஎல் தொடரின் வர்ணனையின் போது ஹேமங் பதானி பேசும் போது, டெல்லி அணி ஒரு வீரரை வாங்குவதற்கு ரூ.11 கோடி வரை செலவு செய்துவிட்டு, எதற்காக பெஞ்சில் அமர வைக்க வேண்டும். நடராஜனை மிடில் மற்றும் டெத் ஓவர்களில் பயன்படுத்துவதற்கு ஸ்பெஷலாக பயன்படுத்த திட்டமிட்டோம்.

- Advertisement -

நடராஜன் ஃபிட்னஸ்

ஆனால் காயத்தில் இருந்து நடராஜன் குணமடைந்தாலும், அவர் முழு ஃபிட்னஸ் உடன் இல்லை. அவர் ஐபிஎல் தொடர் முழுக்கவே முழு ஃபிட்னஸிற்கு திரும்பவில்லை. அதன் காரணமாகவே நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இடதுகை வேகப்பந்துவீச்சாளரான நடராஜன் தற்போது காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளார்.

விரைவில் டிஎன்பிஎல் தொடரில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அடுத்த ஐபிஎல் தொடரின் போது நடராஜன் விடுவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் பெரிய தொகைக்கு வாங்கப்பட்டதால், மீண்டும் அவரை ஐபிஎல் மினி ஏலத்தில் விட்டு டெல்லி அணியே மீண்டும் வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles