2023 ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக் கோப்பை வருகின்ற அக்டோபர் மாதம் 5ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் உலகக் கோப்பையில் விளையாடும் 15 வீரர்கள் கொண்ட பட்டியலை பிஜிசிஐ அறிவித்தது. இந்தியாவின் உலகக்கோப்பை அணி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து அது தொடர்பான விவாதங்களும் விமர்சனங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஒரு பக்கம் கேஎல்.ராகுல் மற்றும் இசான் கிஷான் இருவரில் யார் விளையாட வேண்டும் என்ற விவாதங்களும் விமர்சனங்களும் நடைபெற்று வரும் வேளையில் மறுபுறம் சஹால் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் ஏன் அணியில் இடம் பெறவில்லை என்பது தொடர்பாகவும் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சு ஆள்ரவுண்டர் சார்துல் தாக்கூர் உலகக்கோப்பையில் தேர்வு செய்யப்பட்டதற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து இருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் தெருவுக்குழு தலைவரும் 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற அணியில் இடம் பெற்ற கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த். இது தொடர்பாக பேசி இருக்கும் தரமான பந்துவீச்சு யூனிட் கொண்டிருக்கும் அணிகள் தான் உலக கோப்பையை வெல்லும் என தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சரியாக செயல்படாத ஒரு வீரரை ஏன் தேர்வு செய்ய வேண்டும் எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இந்திய அணியின் உலகக் கோப்பைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களை பற்றிய விவாதம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நடைபெற்றது. இதில் இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் மற்றும் இந்திய அணியின் முன்னாள் தேர்வு குழு தலைவர் ஸ்ரீகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ஸ்ரீகாந்த் சார்புல்தாகூர் ஒரு முழுமையான பேட்ஸ்மேன் இல்லை . 2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பைக்கு பிறகு அவர் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் 25 தான் . மேலும் பந்து வீச்சிலும் அவர் அனேகமான போட்டிகளில் பத்துபவர்களை முழுமையாக வீசியதில்லை. இப்படி இருக்கும்போது அவரை எவ்வாறு ஆல்ரவுண்டர் என அழைக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார் .
மேலும் இது தொடர்பாக தனது பக்க கருத்துக்களை பகிர்ந்து கொண்டு அவர் ” எல்லோரும் எட்டாவது இடத்தில் ஒரு பேட்ஸ்மேன் வேண்டும் என கூறுகிறார்கள் அந்த இடத்தில் சார்துல் தாக்கூர் எத்தனை ரன்களை எடுத்திருக்கிறார்? அவர் வரும் 10 ரன்கள் தான் எடுக்கிறார். மேலும் பெரும்பாலான போட்டிகளில் அவர் 10 அவர்களை நிறைவு செய்ததில்லை . சமீபத்தில் நடைபெற்ற நேபாள் அணிக்கு எதிரான போட்டியில் கூட நான்கு ஓவர்கள்தான் வீசினார். வெஸ்ட் இண்டீஸ் மற்றும் சிம்பாப்பே போன்ற அணிகளுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதை பெரிய சாதனை போன்று கொண்டாடாதீர்கள் என தெரிவித்தார்.
அவர் ஒரு தலைசிறந்த வீரர் என்றால் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற அணிகளுடன் தனது திறமையை காட்டட்டும். சராசரி மற்றும் புள்ளி விவரங்களை வைத்து உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள் என கடுமையுடன் கூறினார் ஸ்ரீகாந்த். 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பிறகு இந்த உலகக்கோப்பை விளையாடும் பத்து அணிகளில் ஒரு நாள் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் சார்துல் தாக்கூர் நான்காவது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் ஒரு நாள் போட்டியில் ஒரு அரை சதமும் எடுத்திருக்கிறார். அவரது பேட்டிங் சராசரி 17 ஆகும்.

