என்ன ஆச்சு சென்னை ரசிகர்களுக்கு.. சேப்பாக்கில் அதை பார்த்து விராட் கோலி நொந்து போயிட்டார் – அஸ்வின் பேட்டி

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்று இருக்கிறது. இந்தப் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் தனது யூடியூப் சேனலில் சென்னை ரசிகர்கள் குறித்து விராத் கோலி ஆச்சரியமாக தன்னிடம் கேட்டதை பற்றி பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த வியாழக்கிழமை சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. 2021 ஆம் வருடத்திற்கு பிறகு 3 வருடங்கள் கழித்து சென்னையில் வைத்து டெஸ்ட் மேட்ச் நடைபெற்றது. நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னையில் டெஸ்ட் மேட்ச் நடைபெறுவதால் அதிகமான ரசிகர்கள் ஆவலுடன் கிரிக்கெட் பார்க்க வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் டெஸ்ட் போட்டி தொடங்கிய முதல் நாள் காலையில் மிகக் குறைவான ரசிகர்களை வந்திருந்தனர். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பொதுவாக சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் ரசிகர்களாக கருதப்படுகின்றனர். வெற்றி தோல்விகளை தாண்டி எந்த அணி சிறப்பாக செயல்படுகிறதோ அந்த அணிக்கு சென்னை ரசிகர்கள் தங்களது ஆதரவை வழங்கி வந்திருக்கிறார்கள். மேலும் உலகக் கோப்பை போன்ற போட்டிகளின் போது இந்தியா போட்டிகளைத் தவிர மற்ற நாடுகள் விளையாடும் போட்டிகளுக்கும் சென்னை ரசிகர்கள் ஆதரவு கொடுத்திருக்கிறார்கள்.

- Advertisement -

இது குறித்து பேசிய அஸ்வின் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடங்கிய போது மைதானத்தில் ரசிகர்களே இல்லாமல் காலியாக இருந்தது என குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் இது தனக்கு ஆச்சரியத்தை கொடுத்ததாக தெரிவித்த அஸ்வின் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும் ரசிகர்கள் வராதது குறித்து தன்னிடம் ஆச்சரியத்துடன் கேட்டதாக தெரிவித்திருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” டெஸ்ட் போட்டியின் முதல் நாள் காலையில் ரசிகர்கள் இல்லாமல் ஸ்டேடியம் காலியாக இருந்தது. இதைப் பார்த்த விராட் கோலி ஏன் ரசிகர்கள் டெஸ்ட் மேட்ச் பார்க்க வரவில்லை என ஆச்சரியத்துடன் என்னிடம் கேட்டார்” என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து முதல் நாள் மாலை வேலையில் அதிகமான ரசிகர்கள் போட்டியை பார்க்க வந்தனர். மேலும் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள், மூன்றாம் நாள் மற்றும் நான்காம் நாட்களுக்கும் அதிகமான ரசிகர்கள் வந்தனர் என அஸ்வின் தெரிவித்தார். மேலும் ரசிகர்களுக்கு டிக்கெட் வாங்குவதில் ஏதும் சிக்கல்கள் மற்றும் பிரச்சினைகள் இருந்ததா எனவும் கேள்வி எழுப்பினார். மேலும் சென்னை டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்கள் தாமதமாக வந்ததற்கு காரணம் என்ன.? என முன்னாள் கிரிக்கெட் வீரரான அஸ்வத் போபோ என்பவரிடம் அஸ்வின் கேட்டார்.

- Advertisement -

இது தொடர்பாக அஸ்வினுக்கு பதில் அளித்த அஸ்வத் போபோ கிரிக்கெட் ரசிகர்களுக்கு சீசன் டிக்கெட் வாங்குவதில் சந்தேகம் இருந்ததாக தெரிவித்தார். ஏனெனில் 5 நாட்களுக்கும் சீசன் டிக்கெட் வாங்கும்போது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மூன்றாம் நாள் அல்லது நான்காம் நாளில் முடிந்து விட்டால் ரசிகர்களுக்கு நஷ்டம் ஏற்படும். இதன் காரணமாக சீசன் டிக்கெட் வாங்க ரசிகர்கள் விரும்பவில்லை என கூறினார். மேலும் அந்தந்த நாட்களுக்கான டிக்கெட் விற்பனையை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கவுண்டர்களில் விற்பனை செய்ததால் அந்த டிக்கெட்டுகளை வாங்கி ரசிகர்கள் கிரிக்கெட் போட்டி பார்க்க வந்ததாக தெரிவித்தார்.

மேலும் தினசரி டிக்கெட் வாங்குவதற்கு கூட்டம் அதிகமாக இருந்ததால் ரசிகர்கள் டிக்கெட் வாங்கி விட்டு கிரிக்கெட் போட்டியை பார்க்க வர தாமதமானதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் ஒரே கவுண்டரில் மட்டும் டிக்கெட் விற்பனை செய்ததால் ரசிகர்களுக்கு டிக்கெட் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதாகவும் அஸ்வத் போபோ கூறினார். சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிக்கு வருகை புரிந்த ரசிகர்கள் இந்திய அணி மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வினிக்கு தங்களது ஆதரவை வழங்கினர். மேலும் போட்டியை காண வந்த ரசிகர்கள் டெஸ்ட் மேட்ச் முடிந்த பிறகு நடைபெற்ற பரிசளிப்பு விழாவையும் பார்த்துவிட்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles