நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மும்பை அணி தோல்வி அடைந்த வருத்தத்தை காட்டிலும் அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா காயத்தால் அவதிப்பட்டு மைதானத்தை விட்டு பாதியில் வெளியேறியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆட்டத்தின் 5வது ஓவரில் ரோஹித் சர்மா 13 பந்துகளை விளையாடி 19 ரன்கள் அடித்து நல்ல நிலையில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென்று காலையில் தசை பிடிப்பு ஏற்பட, பிசியோதெரபிஸ்ட் உடனடியாக வந்து முதலுதவி அளித்தார். இருப்பினும் ரோஹித் சர்மா சில பந்துகளை எதிர்கொண்ட பின்னர் வலியின் தீவிரம் குறையாததால் மைதானத்தை விட்டு பாதியில் வெளியேறினார்.
இதனால் 240 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணிக்கு ரோகித் சர்மாவின் காயம் பெரிய பின்னடைவை ஏற்படுத்த, இறுதியாக 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. எனவே அவரது காயம் குறித்த மருத்துவ அறிக்கை இன்னும் மும்பை இந்தியன்ஸ் அணியால் வெளியிடப்படவில்லை. ஏற்கனவே மும்பை அணி மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள நிலையில் அடுத்தடுத்த போட்டிகளில் இனி வெற்றி பெற்றால் தான் மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்று இருக்கும் நிலையில் ரோஹித் சர்மா விரைவில் குணமாகி விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். எனவே ரோஹித் அடுத்த போட்டியில் விளையாடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்

