உண்மையாவே என்ன நடந்துச்சுன்னா.. மேட்ச் நடக்க கூடாதுன்னு நாங்க வேண்டிக்கிட்டு இருந்தோம் .. பகார் ஜமான் விசித்திர பேட்டி.!

2023 ஆம் ஆண்டின் உலகக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இரண்டு அணிகளுக்கும் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு முக்கியமான போட்டி என்பதால் பரபரப்பாக தொடங்கியது.

- Advertisement -

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து 50 ஓவர்களில் 401 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் இழந்திருந்தது. இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணி ஆரம்ப நிலையில் ஒரு விக்கெட் இழந்திருந்த போதும் அதிரடியாக 402 ரன்களை துரத்தியது. அந்த அணியின் துவக்க வீரர் பகார் ஜமான் மற்றும் பாபர் அசாம் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 196 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். வெற்றி கூட்டணியாகவும் முடிந்தது.

- Advertisement -

நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி 25.3 ஓவர்களில் 200 ரன்கள் எடுத்திருந்தபோது மழை வந்ததால் போட்டி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் போட்டி தொடர முடியாமல் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. டிஎல்எஸ் முறைப்படி பாகிஸ்தான் அணி 179 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். அப்போது பாகிஸ்தான் 200 ரன்கள் எடுத்திருந்ததால் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் 8 புள்ளிகள் பெற்ற பாகிஸ்தான் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. மேலும் அவர்களது நெட் ரன்ரேட் +0.036 ஆக முன்னேறி இருக்கிறது.

- Advertisement -

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் பக்கார் ஜமான் மிகச் சிறப்பாக விளையாடி தனது சதத்தை பதிவு செய்தார். மேலும் பாகிஸ்தான் அணிக்காக உலகக்கோப்பையில் அதிவேக சதம் எடுத்த வீரர் என்ற சாதனையும் படைத்தார். இவர் நேற்றைய போட்டியில் 63 பந்துகளில் தனது சதத்தை பதிவு செய்தார். மேலும் அதிரடியாக ஆடி ஆவார் 81 பந்துகளில் பதினோரு சிக்ஸர்கள் மற்றும் 9 பவுண்டரிகளுடன் 126 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.

பாகிஸ்தான் வீரர் ஒருவரால் உலகக் கோப்பையில் ஒரு இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட அதிக சிக்ஸர்கள் இதுவாகும். மேலும் ஒரே உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள் எடுத்த பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையையும் படைத்தார் பகார் ஜமான். இவர் இதுவரை 2023 உலகக்கோப்பை தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடி 18 சிக்ஸர்கள் எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாகிஸ்தான் அணியில் பார்ட்னர்ஷிப்பாக அதிக ரன்கள் குறித்த வீரர்கள் என்ற சாதனையையும் பாபர் அசாம் மற்றும் பக்கார் ஜமான் நேற்று சமன் செய்தனர். இதற்கு முன்பு 1999 உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக சையத் அன்வர் மற்றும் வஜகத்துல்லா வஸ்தி இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 194 ரன்கள் எடுத்தது சாதனையாக இருந்தது. நேற்றைய போட்டியில் இந்த சாதனையும் சமன் செய்யப்பட்டிருக்கிறது.

- Advertisement -

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புகார் ஜமான் தொடர்ச்சியாக இரண்டாவது முறை ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஆட்டநாயகன் விருது பெற்ற பின் பேசிய அவர்” நாங்கள் 400 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை துரத்தி விளையாடினோம். அந்த இலக்கை நோக்கியே எங்களது ஆட்டமும் அமைந்தது. முதல் நான்கு ஓவரில் ஆடுகளம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கவனமாக பார்த்தேன். அதிர்ஷ்டவசமாக என்னுடைய நாளாக அமைந்தது. மேலும் இந்தப் போட்டியில் எனக்கு சில முறை அதிர்ஷ்டமும் இருந்தது. இந்த ஆட்டத்தை மிகவும் ரசித்து விளையாடினேன். நிச்சயமாக இந்த இன்னிங்ஸ் என்னுடைய சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்று. எனினும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக நான் எடுத்த 193 ரன்கள் தான் என்னுடைய சிறந்த ஆட்டம்” என தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” நியூசிலாந்து அணியும் ஒரு வலிமையான அணி என்பதால் இந்த இன்னிங்ஸ் என்னுடைய சிறப்பான ஆட்டங்களில் ஒன்று. போட்டி மீண்டும் நடைபெற கூடாது என்று நாங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தோம். இதுதான் உண்மையாக நடந்தது. ஏனென்றால் காலதாமதம் ஆகிவிட்டது. மேலும் டிஎல்எஸ் விதிமுறைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்பது எங்களுக்கு தெரியும். இன்றைய போட்டியிலும் நாங்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம் இனிவரும் போட்டிகளிலும் இதே நடைமுறை தொடரும். ஏனென்றால் நாங்கள் விளையாடுவோம் ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு வாழ்வா.?சாவா.? என்ற நிலையில் இருக்கிறது. எனவே தொடர்ந்து ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என தெரிவித்தார் பகார் ஜமான்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles