ஏன்பா சிஎஸ்கே அந்த பையனை எடுக்கல.. என் மனசே நொறுங்கிடிச்சி.. 2 கோடிக்கு கூட வொர்த் இல்லையா – ஆகாஷ் சோப்ரா விமர்சனம்

2025 ஆம் வருடத்திற்கான ஐபிஎல் மெகா ஏலம் சவுதி அரேபிய தலைநகரான ரியாத் நகரில் வைத்து நடைபெற்றது. 574 வீரர்கள் கலந்து கொண்ட இந்த ஏலத்தில் 62 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 120 இந்திய வீரர்கள் உட்பட 182 வீரர்களை அணிகள் ஏலத்தில் வாங்கியது. இந்த ஏலத்தில் இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிசப் பண்ட் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை படைத்தார்.

- Advertisement -

அவரை 27 கோடி ரூபாய்க்கு லக்னோ அணி வாங்கியது. மேலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயரை 26.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இதன் மூலம் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட இரண்டாவது வீரர் என்ற சாதனை ஸ்ரேயாஸ் ஐயர் வசம் வந்தது. மேலும் இந்த ஏலத்தில் 13 வயது இளம் வீரரான சூர்யவண்சியை 1.1 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கி இருக்கிறது.

- Advertisement -

வீரர்கள் ஏலத்தில் வாங்கப்பட்டதை தொடர்ந்து அனைத்து அணிகளும் 2025 ஆம் வருட ஐபிஎல் தொடருக்காக தங்கள் அணியை வலுவாக கட்டமைத்திருக்கிறது. இந்நிலையில் கடந்த ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக விளையாடிய பல வீரர்கள் ஏலத்தில் வாங்கப்படாதது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான டேவிட் வார்னர் ஐபிஎல் தொடர்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்காக சிறப்பான பங்களிப்பை வழங்கினார். இவரது தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2016 ஆம் வருடம் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 3 வருடங்களாக டெல்லி அணியில் விளையாடி வந்த டேவிட் வார்னரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை என்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது.

இந்நிலையில் சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்காக சிறப்பாக விளையாடி வந்த இந்திய அணியின் ஆல் ரவுண்டர் சார்துல் தாக்கூர் அணிகளால் வாங்கப்படாதது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சார்துல் தாக்கூர் ஐபிஎல் அணிகளால் தேர்வு செய்யப்படாதது அதிர்ச்சியாக இருப்பதோடு தனது மனதை சுக்குநூறாக நொறுக்கி விட்டது என இந்திய அணியின் முன்னாள் வீரரும் பிரபல கிரிக்கெட் விமர்சகருமான ஆகாஷ் சோப்ரா தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இது தொடர்பாக யூடியூப் சேனலுக்கு பேசியிருக்கும் அவர் சார்துல் தாக்கூர் தேர்வு செய்யப்படாதது குறித்து தனது அதிருப்தியை தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து விரிவாக பேசியிருக்கும் அவர் சார்துல் தாக்கூர் பெயர் 2 முறை வந்த போதும் ஒரு அணி கூட அவரை வாங்க முன்வரவில்லை. இது மிகவும் வருத்தமான ஒன்று என தெரிவித்தார். மேலும் சிஎஸ்கே அணி அவரை 2 கோடி ரூபாய்க்கு வாங்கி இருக்கலாம். அந்தத் தொகைக்கு வாங்குவதற்கு கூட அவர் மதிப்பில்லாமல் போய்விட்டாரா? எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

கடந்த 2018 ஆம் வருடம் முதல் 2021 ஆம் வருடம் வரை சிஎஸ்கே அணிக்காக விளையாடிய சார்துல் தாக்கூர் 2021 ஆம் வருட ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக அமைந்ததை ஆகாஷ் சோப்ரா சுட்டிக்காட்டினார். அந்தத் தொடரில் 21 விக்கெட்டுகள் வீழ்த்தி சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக இருந்தார். ஆனால் இந்த வருட ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி அவரை வாங்காமல் விட்டது தனது மனதை நொறுக்கி விட்டதாக தெரிவித்திருக்கிறார்.

2020-21 பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை பிரிஸ்பேன் மைதானத்தில் வீழ்த்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் சார்துல் தாக்கூர் 7 விக்கெட்டுகள் வீழ்த்தியதோடு முதல் இன்னிங்ஸில் அரை சதம் எடுத்தார். அப்போது அவரைப் 10 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்க முன்வந்த அணிகள் தற்போது 2 கோடி ரூபாய்க்கு கூட வாங்க முன்வரவில்லை என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது எனவும் ஆகாஷ் சோப்ரா தெரிவித்திருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles