விராட் கோலிக்காக வெல்வோம்.. ஆர்சிபி அணிக்காக 18 ஆண்டுகளாக போராடி இருக்கிறார்.. ரஜத் பட்டிதர் எமோஷனல்

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து ஆர்சிபி அணி விளையாட உள்ளது. ஆர்சிபி அணி 9 ஆண்டுகளுக்கு பின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. இதனால் ஆர்சிபி அணியின் 17 ஆண்டு கால கனவு முடிவுக்கு வரும் என்று அந்த அணியின் ரசிகர்கள் நம்பிக்கையுடன் கூறி வருகின்றனர்.

- Advertisement -

ரஜத் பட்டிதர் பேட்டி

ஏனென்றால் ஆர்சிபி அணி இதுவரை 3 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய போதும், அந்த அணியால் வெல்ல முடிந்ததில்லை. அதேபோல் பஞ்சாப் அணியும் வலிமையாக இருப்பதால், இறுதிப்போட்டி நிச்சயம் சிறந்ததாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலைய்ல் ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இம்முறை விராட் கோலிக்காக வெல்ல முயற்சிப்போம்.

- Advertisement -

இந்திய அணிக்காகவும், ஆர்சிபி அணிக்காகவும் ஏராளமான சாதனைகளை படைத்தவர் விராட் கோலி. டிம் டேவிட் விளையாடுவாரா என்பதை மருத்துவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். எப்படியும் நாளை மாலை அவர் விளையாடுவாரா என்பது அனைவருக்கும் தெரிந்துவிடும். நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாட முயற்சிக்கிறோம். ஒரு மேடைக்காகவே நாங்கள் இதுவரை விளையாடி வருகிறோம்.

- Advertisement -

கேப்டன்சி அனுபவம்

அதேபோல் ஆர்சிபி அணி அனைத்து விஷயங்களையும் எளிமையாகவே கையாள்கிறது. ஆர்சிபி அணியின் கேப்டன்சியை இதுவரை மகிழ்ச்சியாகவே அனுபவித்து வருகிறேன். என்னை பொறுத்தவரை இதுவொரு சிறந்த வாய்ப்பு. ஏனென்றால் சிறந்த கிரிக்கெட்டர்களை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது. வெளிநாட்டு வீரர்களும் சிறந்தவர்களாக இருக்கிறார்கள்.

அனைவரிடம் இருந்தும் கற்றுக் கொள்வதற்கும், பரிமாறி கொள்வதற்கும் ஏராளமான விஷயங்கள் இருந்தது. அவையனைத்தும் எனக்கு உதவியாக இருந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார். ஆர்சிபி அணியின் கேப்டனாக ரஜத் பட்டிதர் களமிறங்கிய முதல் சீசனிலேயே அவர் இறுதிப்போட்டிக்கு அழைத்து வந்திருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles