எங்களுக்கு தெரியும்.. பெங்களூர் கிரவுண்ட்ல ஒரு பிராப்ளம் இருக்குன்னு.. அதை சரியா யூஸ் பண்ணிட்டோம்.. வெற்றிக்குப் பின் பாபர் அசாம் தைரியமான பேட்டி.!

நடப்பு உலக கோப்பை தொடரின் 35 வது போட்டியில் இன்று பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி டக்வேர்த் லிவீஸ் முறையில் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணியின் அரை இறுதி வாய்ப்பு தக்க வைக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

முன்னதாக இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 401 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் ரச்சின் ரவீந்தரா மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 94 பந்துகளில் 108 ரன்கள் எடுத்தார். இவருடன் விளையாடிய கேப்டன் வில்லியம்சன் 79 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் முகமது வசீம் ஜூனியர் 60 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து 402 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிகப்பெரிய இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணிக்கு பகார் ஜமான் மற்றும் பாபர் அசாம் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியாக விளையாடிய ஜமான் 81 பந்துகளில் 126 ரன்கள் எடுத்திருந்தார். பாபர் அசாம் 63 பந்துகளில் 66 ரன்கள் எடுத்திருந்தார். இந்நிலையில் பாகிஸ்தான் 25 ஓவர்களில் 200 ரன்கள் எடுத்திருந்தபோது மழை மீண்டும் பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து டிஎல்எஸ் முறைப்படி பாகிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் 8 புள்ளிகள் பெற்று புலிகள் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. மேலும் அந்த அணியின் நெட் ரன் ரேட் +0.036 ஆக முன்னேறி இருக்கிறது. இதனால் பாகிஸ்தான் அணி வீதி இருக்கும் இங்கிலாந்து அணியுடன் ஆட்டத்தில் வெற்றிபெறும் போது அரை இறுதிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகவே உள்ளது. இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடி சதம் எடுத்த பகார் ஜமான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

போட்டிக்கு பின் பேட்டியளித்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம்” நாங்கள் முதல் இன்னிங்ஸ் முடிந்து டிரெஸ்ஸிங் ரூம் வந்தபோது வீரர்களுக்கிடையே நல்ல பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டும் என்று தீர்மானித்தோம். நான் பக்கார் ஜமானிடம் கூறினேன் நீ 15 ஓவர் நின்று விளையாடினால் டிஎல்எஸ் இலக்கத்தை விட நம்மால் முன் நிற்க முடியும் என்று. அதற்கு ஏற்றார் போல் அவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நாங்கள் இன்றைய பின்னாளில் மழை வரும் என்பதை முன்னரே கணித்திருந்தோம். அதற்கு ஏற்றார் போல் மழையும் பெய்தது எனக் கூறினார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” பக்கர் ஜமானுக்கு தான் இந்த வெற்றிக்கான அனைத்து போராட்டங்களும் சேரும். அவரது அதிரடியான ஆட்டத்தால் மழை குறுக்கிட்ட போதும் டிஎல்எஸ் பார் இலக்கை விட எங்களால் முன்னேறி செல்ல முடிந்தது. மேலும் பெங்களூரு மைதானத்தின் அளவீடுகள் மற்ற மைதானங்களை விட சிறியது என்பதையும் நாங்கள் அறிவோம். அதனை சிறப்பாக பயன்படுத்தி வெற்றி பெறுவோம் என்று யோசனையும் எங்களுக்கு இருந்தது. இந்த மைதானத்தில் பௌண்டரியை கிளியர் செய்வது மற்ற மைதானங்களை விட எளிதானது இதுவும் எங்களுக்கு சாதகமாக அமைந்தது.

நாங்கள் எங்களுடைய 100 சதவீத உழைப்பையும் கொடுத்து விளையாடினோம். இனிவரும் ஒவ்வொரு போட்டிகளிலும் எங்களது முழு திறமையையும் காட்டி விளையாடுவோம். எது எப்போது நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. அதனால் நாங்கள் ஒரு போட்டிக்கு பின் அடுத்த போட்டியை பற்றி மட்டுமே யோசிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles