தோற்ற 5 போட்டிகளில் தொடக்கம் மோசம்.. ரகுவன்ஷியை கடைசியில் இறக்க காரணம் என்ன? ரஹானே பதில்

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் கேகேஆர் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 198 ரன்களை விளாசியது. சிறப்பாக ஆடிய சுப்மன் கில் 90 ரன்களையும், சாய் சுதர்சன் 52 ரன்களையும், பட்லர் 41 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

இதன்பின் களமிறங்கிய கேகேஆர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதனால் புள்ளிப் பட்டியலில் கேகேஆர் அணி 8 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 5 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 7வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் கேகேஆர் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

- Advertisement -

கேகேஆர் அணியின் பிரச்சனை

இந்த தோல்வி தொடர்பாக கேகேஆர் அணியின் கேப்டன் அஜிங்கியா ரஹானே பேசும் போது, ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் 199 ரன்கள் என்ற இலக்கு சேஸிங் செய்யக் கூடியதுதான். பவுலிங்கில் நாங்கள் சிறப்பாக கம்பேக் கொடுத்தோம். ஆனால் இதுபோன்ற பெரிய இலக்கை சேஸிங் செய்யும் போது, நல்ல தொடக்கம் அமைய வேண்டும். ஆனால் இந்த ஐபிஎல் தொடர் முழுக்கவே சிறந்த தொடக்கம் எங்களுக்கு அமையவில்லை.

- Advertisement -

ஆனாலும் விரைவில் சரி செய்ய வேண்டும். பவுலிங் செய்யும் போது பிட்ச் கொஞ்சம் ஸ்லோவாக இருந்தது. 200 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினால் சரியாக இருக்கும் என்று நினைத்தோம். அதேபோல் மிடில் ஓவர்களில் நாங்கள் சிறப்பாக பேட்டிங்கை செய்யவில்லை. எங்கள் பவுலர்களை ஒருபோதும் குறை சொல்லப் போவதில்லை. ஏனென்றால் ஒவ்வொரு போட்டியிலும் முன்னேறி வருகிறார்கள்.

ரகுவன்ஷி கடைசில் வந்தது ஏன்?

ஃபீல்டிங்கில் இன்னும் சிறப்பாக செயல்பட்டால், 15 முதல் 20 ரன்களை கட்டுப்படுத்த முடியும். அனைவருமே கடுமையாக பணியாற்றி வருகிறோம். ஆனால் டி20 கிரிக்கெட்டில் கூடுதல் மன வலிமையுடன் விளையாட வேண்டும். கடந்த காலம் பற்றியும், தவறுகள் பற்றியும் அதிகம் சிந்திக்க கூடாது. எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் அட்டாக் செய்ய வேண்டும். மிடில் ஓவர்களில் விளையாட சிறந்த பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள்.

- Advertisement -

நாங்கள் ஆதரவு கொடுத்தாலும், அவர்கள் இன்னும் அட்டாக்கிங் கிரிக்கெட்டை ஆட வேண்டும். ரகுவன்ஷி கடைசி நேரத்தில் களமிறங்கி சிறப்பாக பேட்டிங் செய்தார். இன்றைய ஆட்டத்தில் மற்ற பேட்ஸ்மேன்களை அட்டாக் செய்வதற்காக களமிறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles