நம்பர் 1 இந்தியாவை தோக்கடிச்சிட்டோம்.. பிளான் போட்டுத் தந்ததே அந்த இந்தியர்தான்.. இலங்கை அணி கோச் ஜெயசூர்யா பேட்டி

டி20 உலக கோப்பை வெற்றிக்கு பிறகு ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்ற இந்திய அணி அதனைத் தொடர்ந்து இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற இந்தியா ஒரு நாள் போட்டி தொடரில் 2-0 என்ற கணக்கில் தோல்வியடைந்து தொடரை இழந்துள்ளது.

- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக 27 வருடங்களுக்குப் பிறகு ஒரு நாள் போட்டி தொடரை இந்தியா இழந்திருப்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மறுபுறம் இந்த வெற்றியின் மூலம் கடந்த சில காலங்களாக சொதப்பி வந்த இலங்கை அணி மீண்டும் புது நம்பிக்கையை பெற்றிருக்கிறது. அந்த அணியின் இடைக்கால பயிற்சியாளரான சனத் ஜெயசூர்யா இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் இந்தியாவிற்கு எதிரான தொடரை வென்ற பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சனத் ஜெயசூர்யா வீரர்கள் மேற்கொண்ட பயிற்சியின் பலனை ஆடுகளத்தில் அறுவடை செய்திருப்பதாக தெரிவித்தார். மேலும் இந்திய அணியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரின் பங்களிப்பு இலங்கை அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றியதாகவும் அவர் தெரிவித்தார். அந்த வீரரின் பயிற்சி முறை தான் வீரர்களுக்கு நம்பிக்கை அளித்து இலங்கை அணி தொடரை கைப்பற்ற முக்கியமானதாக அமைந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது தொடர்பாக பேசிய ஜெயசூர்யா ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவரான ஜூபின் பருச்சா என்பவரை அழைத்து இலங்கை அணி வீரர்களுக்கு ஒரு வாரம் பயிற்சி அளித்ததாக தெரிவித்துள்ளார். அவர் அளித்த பயிற்சி வீரர்கள் அதிக நேரம் களத்தில் நின்று ரன் குவிப்பதற்கான உத்வேகத்தையும் நம்பிக்கையையும் வீரர்களுக்கு வழங்கியதாக அவர் தெரிவித்தார். ஜூபின் பருச்சா என்பவர் மும்பையைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை மும்பை அணிக்காக 17 முதல் தர போட்டிகளில் விளையாடி இருக்கும் ஜூபின் பருச்சா 1,021 ரன்கள் சேர்த்திருக்கிறார். இதில் 3 சதங்களும் 4 அரை சதங்களும் அடங்கும். கவுண்டி கிரிக்கெட் போட்டியில் சர்ரே அணிக்காகவும் இவர் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது ஒரு வார கால பயிற்சி இலங்கை வீரர்களின் ஆட்டத்திறனில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என சனத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார். வீரர்களின் மனநிலையில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் கூட போட்டியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

டி20 போட்டிகளில் இலங்கை அணி தோல்வி அடைந்த போதும் ஜூபின் பருச்சாவின் பயிற்சி காரணமாக இலங்கை அணியினர் தன்னம்பிக்கையுடன் ஒரு நாள் போட்டி தொடரில் இந்தியாவை எதிர்கொண்டு வீழ்த்தியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என ஜெயசூர்யா தெரிவித்துள்ளார். உலகின் தலைசிறந்த அணியான இந்தியாவுடன் பெற்ற இந்த வெற்றி இலங்கை கிரிக்கெட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் கூறினார்.

இலங்கை அணியின் பயிற்சியாளராக தொடருவீர்களா.? என்ற கேள்விக்கு பதில் அளித்த ஜெயசூர்யா இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான தொடருக்கு தன்னை பயிற்சியாளராக பணியாற்ற இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் கேட்டுக் கொண்டதால் தற்போது பயிற்சியாளராக பணியாற்றுவதாக தெரிவித்தார். மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பிறகு இலங்கை கிரிக்கெட் வாரியம் திறமையான பயிற்சியாளரை நியமிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து தொடருக்குப் பிறகு பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகும் நான் இலங்கை அணியின் ஹை பெர்பார்மன்ஸ் சென்டரில் எனது பணியை தொடர்வேன் எனவும் ஜெயசூர்யா கூறினார். திறமையான இந்த இளம் வீரர்களை புதிதாக பதவியேற்கும் பயிற்சியாளர்கள் சிறப்பாக வழி நடத்துவார்கள் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். மேலும் இந்திய அணிக்கு எதிராகப் பெற்ற இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை போல பல வெற்றிகளை இலங்கை கிரிக்கெட் அணி வரும் காலங்களில் வெல்லும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles