இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகின்ற நிலையில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸ் விளையாடுகிறது.
இந்த நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பு பெற்ற வாஷிங்டன் சுந்தர் இந்த போட்டி குறித்து சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிற நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியோடு ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வு முடிவை அறிவித்தார். எனவே அவருக்கு பதிலாக இந்திய அணியின் மற்றொரு சிறப்பான சுழல் பந்துவீச்சாளரான வாஷிங்டன் சுந்தர் நான்காவது போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் குவித்திருக்கும் நிலையில் தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்திருக்கிறது. ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜா ஆகியோர் களத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில் இந்தப் போட்டியில் பேட்டிங் செய்யப் போகும் விதம் குறித்து வாஷிங்டன் சுந்தர் சில முக்கிய கருத்துகளை பேசியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் பொழுது “இந்திய அணி என்னிடமிருந்து என்ன மாதிரியான விஷயங்களை எதிர்பார்க்கிறது என்று நான் நன்றாக உணர்கிறேன். நான் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் என்னால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும்.எனவே இந்த டெஸ்ட் போட்டியில் எனது சிறந்த பேட்டிங் பங்களிப்பை வெளிப்படுத்துவதில் உறுதியாக இருக்கிறேன். அணியின் சூழ்நிலை தற்போது சிறப்பாக இருக்கிறது.
இதையும் படிங்க:ஜெய்ஸ்வாலை ரன் அவுட்டில் சிக்க வைத்த கோலி? பள்ளி சிறுவன் போல் செய்த தவறு- சஞ்சய் மஞ்சுரேக்கர் தாக்கு
நாங்கள் முழு ஆற்றலுடன் விளையாட தயாராக இருக்கிறோம் இன்னும் மூன்று நாட்கள் ஆட்டம் மீதம் இருக்கிறது. எனவே நாளை ஆடுகளம் நிச்சயம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் நமது அணிக்குத் தேவையான விஷயங்களை செய்து பலப்படுத்துவோம். நாளை சிறப்பாக பேட்டிங் செய்து இந்திய அணி நல்ல நிலையை அடைய கண்டிப்பாக முயற்சி செய்வோம்” என்று வாசிங்டன் சுந்தர் பேசியிருக்கிறார். இன்னும் மூன்று நாட்கள் ஆட்டம் மட்டுமே மீதம் இருக்கும் நிலையில் இந்திய அணி இந்த போட்டி மற்றும் அடுத்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே உலகத்தை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

