இந்திய கிரிக்கெட் அணி தற்போது 17 வருடங்களுக்குப் பிறகு இரண்டாவது முறையாக டி20 உலக கோப்பை ரோகத் ஷர்மா தலைமையில் வென்று சாதனை படைத்துள்ளது.
இந்த சூழ்நிலையில் விராட் கோலியின் சமூக வலைதள பதிவு மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இந்திய ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு தற்போது உலகெங்கிலும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக வெஸ்ட் இண்டீஸ் இல் இருந்து வந்து இறங்கிய இந்திய அணிக்கு டெல்லியில் மட்டுமல்லாமல் மும்பையிலும் மிகப்பெரிய உற்சாகமாக விற்பளிக்கப்பட்டது. மேலும் இந்தியா முழுவதும் இந்திய வீரர்களுக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் இந்திய அணி வீரர்களும் தங்கள் உலக கோப்பையை வென்ற மகிழ்ச்சியை ஒவ்வொருவரும் தங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். புகழ் பெற்ற சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கால்பந்து நட்சத்திரங்களான ரொனால்டோ மற்றும் மெஸ்ஸிக்கு அடுத்தபடியாக கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு அதிக அளவிலான ரசிகர்கள் எண்ணிக்கை உள்ளது.
இந்த சூழ்நிலையில் விராட் கோலி உலகக் கோப்பையை வென்றது குறித்து தனது சமூக வலைதளத்தில் அதன் புகைப்படங்களை பதிவிட, அது இதுவரை 17 மில்லியன் விருப்பங்களை பெற்றுள்ளது. இதற்கு முன்பாக பாலிவுட் நட்சத்திரங்களான கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்கோத்ராவின் திருமண புகைப்படம் பதினாறு மில்லியன் லைக்குகளை பெற்றது.
தற்போது அதுவே ஆசியாவின் அதிகபட்ச லைக்குகள் பெற்ற புகைப்படமாக இருந்த போது விராட் கோலியின் புகைப்படம் அதைவிட ஒரு மில்லியன் லைக்குகளை அதிகமாக பெற்று ஆசிய கண்டத்திலேயே அதிக லைக்குகள் பெற்ற புகைப்படம் என்ற பெருமையும் பெற்றுள்ளது.
விராட் கோலியை இதுவரை 270 மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்கிறார்கள். அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிடும் ஒவ்வொரு பதிவிற்கும் 5.50 கோடி ரூபாய் கட்டணமாக பெறுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:உலகக் கோப்பை வெற்றிக்கு ஆணிவேர் அவர்தான்.. அதனால் இந்த கோப்பையை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்- குல்தீப் பேட்டி
உலகிலேயே அதிக ரசிகர்கள் பின் தொடரும் மூன்றாவது வீரர் என்ற பெருமையும் விராட் கோலி பெற்றுள்ளார். இதன் மூலம் கிரிக்கெட்டில் மட்டுமல்ல சமூக வலைதளத்திலும் நான் தான் நம்பர் ஒன் என்றும் விராட் கோலி நிரூபித்திருக்கிறார். தற்போது டி20 ஃபார்மெட்டில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி அடுத்தது ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் கவனத்தை செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் டி20 ஃபார்மெட்டில் ஐபிஎல் கிரிக்கெட் மட்டும் தொடர்ந்து விளையாடுவார். ஐபிஎல் கிரிக்கெடடிலும் விராட் கோலி ஓய்வு பெறுவதற்கு முன்னர் ஆர்சிபி அணி ஒருமுறையாவது ஐபிஎல் கோப்பையை வென்று விட வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.

