உலகக் கோப்பை வெற்றிக்கு ஆணிவேர் அவர்தான்.. அதனால் இந்த கோப்பையை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்- குல்தீப் பேட்டி

டி20உலக கோப்பையை வென்ற உற்சாகத்தில் இருக்கும் இந்திய அணி வீரர்கள் பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகின்றனர்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ் இந்த டி20 உலக கோப்பை வெற்றிக்கு முக்கிய காரணமாக இந்திய வீரர் ஒருவரை குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியை பொறுத்த வரை இந்த டி20 உலக கோப்பை தனிநபர் சார்ந்ததாக இல்லாமல் ஒட்டுமொத்த அணியும் சிறப்பாக செயல்பட்டது. முக்கியமாக அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, கடைசி போட்டியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி, ஹர்டிக் பாண்டியா, பும்ரா, குல்தீப் யாதவ், அக்ஸார் பட்டேல் என இன்னும் சொல்லப்படாத வீரர்கள் பலரும் இந்த உலகக் கோப்பை வெற்றிக்கு உறுதுணையாக நின்றனர்.

- Advertisement -

இந்த டி20 உலக கோப்பையோடு விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஜடேஜா ஆகியோர் தனது ஓய்வினை அறிவித்திருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த டி20 கேரியர் மறக்க முடியாத அனுபவத்தை நிச்சயமாக கொடுத்திருக்கும். அதிலும் குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்ற குறைந்த வருடங்களிலேயே இந்திய அணிக்காக மிகச் சிறப்பான வெற்றியை பெற்று கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட இந்திய அணியின் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் இந்த டி20 உலக கோப்பையை ரோஹித் சர்மாவுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று அதற்கான முக்கிய காரணத்தை கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் விரிவாக கூறும்பொழுது “இந்த டி20 உலக கோப்பையை ரோகித் சர்மாவிற்கு நான் சமர்ப்பிக்க ஆசைப்படுகிறேன். ஏனென்றால் அணியின் ஒவ்வொரு மீட்டிங் போது ஆக்ரோஷமாக டி20 கிரிக்கெட் விளையாடும் அணுகுமுறை குறித்து எல்லோரிடமும் கூறுவார். அதை சொல்வதோடு மட்டுமல்லாமல் தானே தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி அதை செய்தும் காட்டுவார். அதனால் இந்த உலகக் கோப்பை அவரைத்தான் சேரும்.

- Advertisement -

இந்த டி20 உலக கோப்பை எங்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்திருக்கிறது. இறுதிப் போட்டியில் விராட் பாய் 70 ரன்கள் அடித்து அவரும் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இதனால் தன்னுடைய டி20 கரியரை நினைத்து விராட் பாய் நிச்சயமா மகிழ்ச்சி அடைவார் என்று நினைக்கிறேன். ரவீந்திர ஜடேஜாவும் கடந்த சில ஆண்டுகளாக டி20 கிரிக்கெட்டில் சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

இதையும் படிங்க:இந்த பிரச்சினையால பஞ்சாப் டீம்ல நான் ரொம்ப கஷ்டப்பட்டேன்.. என்ன மாதிரி நீங்க இருக்க கூடாது- மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய நடராஜன்

இந்த வெற்றிக்கு பின்னர் பேருந்தில் சென்று ரசிகர்களை சந்தித்ததை நான் என் வாழ்நாளில் மறக்க மாட்டேன். 2007ஆம் ஆண்டு மகிபாயும் இதே போன்ற ஒரு அனுபவத்தை பெற்றிருப்பார். ஆனால் மும்பையில் நடைபெற்றது ஒரு மறக்க முடியாத மகிழ்ச்சித்திரமாக எங்களுக்கு அமைந்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles