வெறும் 25 ரன்.. சச்சின் டெண்டுல்கரின் இமால சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை படைக்க காத்திருக்கும் விராட் கோலி.. முழு விபரம்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரன விராட் கோலி தற்போது டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து முழுவதுமாக ஓய்வு பெற்று ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே தொடர்ந்து தனது கவனத்தை செலுத்தி வருகிறார். இந்த சூழ்நிலையில் அடுத்ததாக விராட் கோலி 3 ஒரு நாள் போட்டிகள் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாட இருக்கும் நிலையில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து உலக சாதனை படைக்க காத்திருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஒரு நாள் கிரிக்கெட்டில் மகத்தான சாதனைகள் படைத்து யாருமே அவ்வளவு எளிதில் நெருங்க முடியாத அளவிற்கு நவீன கால ஜாம்பவானாக திகழ்ந்து வருகிறார். இந்த நிலையில் அவர் 2027 ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பை வரை விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விராட் கோலி அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் விராட் கோலி இதுவரை 308 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 14,557 ரன்கள், 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9230 ரன்கள், மேலும் 123 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 9230 ரன்கள் குவித்து இருக்கிறார். மூன்று வகையான போட்டிகளிலும் விராட் கோலி 27,975 ரன்கள் குவித்து இருக்கிறார். எனவே 28000 ரன்கள் குவிக்க விராட் கோலிக்கு இன்னும் 25 ரன்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில் சச்சின் டெண்டுல்கர் இதை நிகழ்த்துவதற்கு 644 போட்டிகள் தேவைப்பட்டது. ஆனால் விராட் கோலி 623 போட்டிகளிலேயே சாதனைக்கு அருகில் நெருங்கி இருக்கும் போது இன்னும் சில போட்டிகளில் இந்த மகத்தான உலக சாதனையை நிகழ்த்தி சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles