என் வாழ்நாளில் ரோகித்தை நான் அப்படி பார்த்தது இல்லை.. வெற்றி விழாவில் விராட் கோலி உருக்கமான பேச்சு

17 வருடங்களுக்குப் பிறகு இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்ற மகிழ்ச்சியை மும்பை மைதானத்தில் நேற்று ரசிகர்களுடன் சேர்ந்து கொண்டாடியது.

- Advertisement -

அப்போது பேசிய விராட் கோலி ரோஹித் சர்மா குறித்து சில உணர்ச்சிகரமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்த டி20 உலக கோப்பை தொடர் விராட் கோலிக்கு இறுதிப் போட்டிக்கு முன்பு வரை சிறப்பாக அமையவில்லை என்றுதான் கூற வேண்டும். தொடக்க வீரராக களம் இறங்கி அனைத்து போட்டியிலும் ஏமாற்றிய நிலையில், ரோகித் சர்மாவும் டிராவிட்டும் அவர் மேல் வைத்த நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக, இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடி 76 ரன்கள் குவித்து இந்தியா வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் உலக கோப்பையை வென்ற பின்னர் டி20 ஃபார்மட்டில் இருந்து தனது ஓய்வையும் அறிவித்திருக்கிறார். எனவே டி20 தொடரில் இருந்து விராட் கோலி ஓய்வு பெறுவதற்கு முன்பாக இந்த உலகக் கோப்பை அவருக்கு மகிழ்ச்சியான தருணமாக அமைந்திருக்கிறது.இந்த நிலையில் நேற்று நடைபெற்ற வெற்றி விழாவில் பேசிய விராட் கோலி ரோஹித் சர்மா குறித்து சில முக்கியமான விஷயங்களை கூறியிருக்கிறார்.

அது குறித்து விராட் கோலி விரிவாக கூறும்பொழுது “நானும் ரோகித் சர்மாவும் விளையாடிய 15 வருடங்களில் ரோஹித் சர்மா அப்படி உணர்ச்சிவசப்பட்டு அழுது என் வாழ்நாளில் நான் ஒருபோதும் கூட பார்த்தது இல்லை. உண்மையில் அது உணர்ச்சிகரமான தருணங்களாக எங்கள் இருவருக்கும் அமைந்தது. எங்கள் இருவராலும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த நாளை எப்போதும் என்னால் மறக்கவே முடியாது.

- Advertisement -

நாங்கள் இருவரும் எப்படியாவது இந்த முறை இந்தியாவுக்காக உலக கோப்பையை வென்று விட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். உலகக் கோப்பையை இந்தியாவுக்கு கொண்டு வருவது என்பது எப்போதுமே ஒரு சிறப்பான விஷயம் ஆகும். இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் நான் ட்ரெஸ்ஸிங் ரூமுக்குள் சென்று கொண்டிருந்தபோது ரோஹித் சர்மா அழுது கொண்டிருந்தார். அந்த சமயத்தில் என்னாளும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.

இதையும் படிங்க:போதும் பா.. கோலி ஆடுனதுதான் சரி.. அவர் சொல்றாருன்னு அவசரமா அடிக்கப் போய் அவுட்டாகவா.. பதிலடி கொடுத்த மிஸ்பா உல் ஹக்

இது போன்ற உணர்ச்சிகரமான நிகழ்வுகளை எங்கள் வாழ்க்கையில் எப்போதுமே மறக்க முடியாத ஒன்றாக அமைந்திருக்கிறது” என்று விராட் கோலி கூறி இருக்கிறார். விராட் கோலி மற்றும் இந்திய வீரர்கள் டி20 உலக கோப்பை குறித்த தருணங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டனர். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவருமே டி20 ஃபார்மேட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் ஒரு நாள் தொடர்களில் கவனம் செலுத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles