6 மாதமாக பேசாமல் இருந்துவிட்டார்.. விராட் கோலியின் சீக்ரெட்டை தெரியாமல் சொல்லிவிட்டேன்.. டி வில்லியர்ஸ் பகிர்வு

சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் அதிக மகிழ்ச்சியுடன் இருக்கும் யாராக இருக்கும் என்றால் அது தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் டி வில்லியர்ஸ் தான். ஏனென்றால் ஜூன் முதல் வாரத்தில் ஆர்சிபி அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற நிலையில், இந்த வாரம் தென்னாப்பிரிக்கா அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று புதிய வரலாறு படைத்துள்ளது.

- Advertisement -

கோலி – டி வில்லியர்ஸ் நட்பு

இந்த இரு போட்டிகளிலும் நடந்த மைதானங்களில் டி வில்லியர்ஸ் நேரடியாக வந்து கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். இதனிடையே விராட் கோலியுடன் சிறிய சண்டை ஏற்பட்டதாக டி வில்லியர்ஸ் கூறியது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் தோனி, சச்சின், டி வில்லியர்ஸ் ஆகிய மூவர் மீதும் விராட் கோலி மிகப்பெரிய மரியாதை வைத்திருக்கிறார். 

- Advertisement -

ஆனாலும் டி வில்லியர்ஸ் உடனான நட்பு இன்னும் கொஞ்சம் ஸ்பெஷலானது. ஏனென்றால் இருவருமே ஒரே நேரத்தில் கிரிக்கெட்டின் உச்சத்தில் இருந்து ஒரே அணிக்காக ஆடினார்கள். இருந்தும் சண்டை வந்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து டி வில்லியர்ஸ் பேசும் போது,  நல்ல வேளையாக கடந்த 6 மாதங்களாக நாங்கள் இருவரும் பேசி வருகிறோம்.

- Advertisement -

2வது குழந்தை

அதற்கு முன்பாக எனக்கு கால்பந்து மட்டுமே இருந்தது. அந்த நேரத்தில் விராட் கோலி – அனுஷ்கா சர்மா 2வது குழந்தையை எதிர்பார்த்திருந்தனர். அதன்பின் மீண்டும் விராட் கோலி பேசிய போதுதான் நிம்மதியாக இருந்தது. என்ன இருந்தாலும் விராட் கோலி மீதான அன்பும், நட்பும் குறையாது. கிரிக்கெட்டின் கடைசி தருணம் வரை அவர் மகிழ்ச்சியாக விளையாட வேண்டும் என்று தெரிவித்தார்.

இதன் மூலமாக விராட் கோலி – அனுஷ்கா சர்மா தம்பதிக்கு 2வது குழந்தை பிறக்க போகும் சம்பவத்தை டி வில்லியர்ஸ் தனது யூட்யூப் சேனலில் கூறிவிட்டார். இதனால் டி வில்லியர்ஸ் உடன் விராட் கோலி பேசுவதை சிறிது காலம் நிறுத்தியதாக தெரிகிறது. இதனை ஆர்சிபி அணியின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles