விராட் கோலி 49வது சதம்.. நான் எதுக்கு வாழ்த்தணும்.. இலங்கை கேப்டன் பதிலால் கிளம்பிய சர்ச்சை.. காரணம் என்ன.?

இந்தியா மற்றும் சவுத் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் சவுத் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்த உலகக்கோப்பை தொடரில் மீண்டும் ஒரு வெற்றியை பதிவு செய்திருக்கிறது. மேலும் இந்தியா இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் தனது முதல் இடத்தையும் உறுதி செய்துள்ளது

- Advertisement -

முன்னதாக இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிய விராட் கோலி ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது 49-வது சதத்தை நிறைவு செய்தார். இந்த சதத்தின் மூலம் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதம் எடுத்த வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்திருக்கிறார். இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடி அவர் 121 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தார். நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக தவறவிட்ட வாய்ப்பை இன்று பூர்த்தி செய்து இருக்கிறார் விராட் கோலி.

- Advertisement -

இந்த சாதனைக்காக பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்திய தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது கூட அவர் சதவி எடுத்த பிறகு தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சச்சின் டெண்டுல்கரின் இந்த சாதனை 11 வருடங்களுக்குப் பிறகு விராட் கோலியால் சமன் செய்யப்பட்டிருக்கிறது. டெண்டுல்கர் ஒரு நாள் போட்டிகளில் தனது 49 வது சதத்தை 2012 ஆம் வருட ஆசிய கோப்பையின் போது பங்களாதேஷ் அணிக்கு எதிராக எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் நாளை நடைபெற இருக்கும் பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான போட்டிக்கு முன்பாக இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் இலங்கை அணியின் கேப்டன் குஷால் மெண்டிஸ் கலந்து கொண்டார். அப்போது நிருபர் ஒருவர் விராட் கோலி தனது 49 வது சதத்தை நிறைவு செய்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்திருக்கிறார் என இலங்கை அணியின் கேப்டனிடம் தெரிவித்தார். இதற்கு அவர் அளித்த பதில் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது நிருபர் ஒருவர் குஷால் மெண்டிஷிடம் “விராட் கோலி ஒரு நாள் போட்டிகளில் தனது 49-வது சதத்தை நிறைவு செய்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்திருக்கிறார். அவரை நீங்கள் வாழ்த்து விரும்புகிறீர்களா.?என கேட்டார். அதற்கு பதில் அளித்த ஸ்ரீலங்கா கேப்டன் ” நான் எதற்காக வாழ்த்து சொல்ல வேண்டும் என பதிலளித்தார். இந்த பதில் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. மேலும் சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

விளையாட்டுப் போட்டிகளின் போது ஒருவர் சாதனை புரிந்தால் அல்லது மற்றவர்களின் சாதனையை சமன் செய்தால் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது தான் மரபு. ஆனால் இலங்கை கேப்டன் இவ்வாறு கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபகாலமாக இலங்கை அணிக்கு எதிராக தொடரும் இந்திய அணியின் ஆதிக்கம் அவரது பதிலுக்கு காரணமாக இருக்கலாம் எனவும் பலரும் தெரிவித்துள்ளனர் . ஆசிய கோப்பை போட்டியில் இலங்கை அணியை 50 ரன்கள் செய்தது இந்தியா. மேலும் இரண்டாம் தேதி நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியின் போதும் அவர்களை 55 ரன்கள் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நாளை நடைபெற இருக்கும் போட்டி நடப்பதில் சிக்கல் இருப்பதாகவும் சில தகவல்கள் தெரிவித்துள்ளன. டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு காரணமாக இந்தப் போட்டி நடத்துவதில் சந்தேகம் இருப்பதாக பல செய்திகள் தெரிவிக்கின்றன . எனினும் காற்று மாசுபாடு தொடர்பாக அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து ஐசிசி மற்றும் பிசிசிஐ சுற்றுப்புறச் சூழல் வல்லுனர்களுடன் சேர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles