பாக்கவே பாவமா இருக்கு.. இளம் சிஎஸ்கே வீரருக்கு கோலி செய்த செயலால் ரசிகர்கள் கோபம்.!

2024ஆம் வருட ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் விளையாடின. முதலில் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 173 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

ஆர்சிபி அணியின் விக்கெட் கீப்பர் அனுஜ் ராவத் 25 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் எடுத்திருந்தார். அந்த அணியின் தினேஷ் கார்த்திக் 26 பந்துகளில் 38 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். சிஎஸ்கே அணியின் முஸ்தபிசுர் ரஹ்மான் 36 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய சிஎஸ்கே அணி 18.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்து 2024 ஆம் வருட ஐபிஎல் தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது. சிஎஸ்கே அணிக்காக ரச்சின் ரவீந்தரா 37 ரன்களும் சிவம் துபே 34 ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

குறிப்பாக சென்னை அணியின் துவக்க வீரராக களமிறங்கிய நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் ரச்சின் ரவீந்தரா சிஎஸ்கே அணிக்கு மிகச் சிறப்பான துவக்கத்தை அமைத்துக் கொடுத்தார். நேற்றைய போட்டியில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருத்ராஜ் 15 ரன்களில் ஆட்டம் இழந்த போதும் அதிரடியாக விளையாடிய ரச்சின் ரவீந்தரா 15 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இவரது அதிரடியான ஆட்டத்தால் சிஎஸ்கே அணி ஆரம்பத்திலேயே வேகமாக ரண்களை குவித்தது. ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் விளையாடிய ரச்சின் ரவீந்திரவை சிஎஸ்கே அணி 18 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியது குறிப்பிடத்தக்கது. உலகக்கோப்பைகளும் நியூசிலாந்து அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர் சிஎஸ்கே அணிக்காக தனது ஆரம்பப் போட்டியில் அதிரடியாக விளையாடி அருமையான துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.

- Advertisement -

3 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 15 பந்துகளில் 37 ரன்கள் எடுத்த அவர் ஆட்டம் இழந்தார். இவரது விக்கெட்டை கைப்பற்றியதை தொடர்ந்து ஆர்சிபி அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மிகவும் ஆக்ரோஷமான முறையில் இவரது விக்கெட்டை கொண்டாடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இறுதியாக தென்னாப்பிரிக்கா அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற விராட் கோலி இங்கிலாந்து அணியுடன் நடைபெற்ற 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் நேற்று மீண்டும் களம் இறங்கிய அவர் பேட்டிங்கில் 20 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தாலும் ஃபீல்டிங்கின் போது தனது அணியை உற்சாகப்படுத்துவதற்காக தன்னுடைய வழக்கமான ஆக்ரோச பாணியில் செயல்பட்டார். சிஎஸ்கே அணியின் ரச்சின் ரவீந்தரா ஆர்சிபி பந்துவீச்சாளர்களை பவர் பிளே ஓவர்களில் மைதானத்தில் நான்கு முனைகளுக்கும் சிதறடித்தார்.

இவரது அதிரடி ஆட்டத்தால் சிஎஸ்கே அணி முதல் 6 ஓவர்களில் 60 ரன்கள் குறித்தது. அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த ரச்சின் ரவீந்தரா கரண் சர்மா வீசிய ஏழாவது ஓவரில் ஆட்டம் இழந்தார். அப்போது அவரது விக்கெட்டை கொண்டாடிய விராட் கோலி மிகவும் ஆக்ரோசத்துடன் கோபமாக சைகை செய்து ஃபெவிலியனை நோக்கி செல்லுமாறு ரச்சின் ரவீந்திரவிடம் கூறினார். விராட் கோலியின் இந்த செயல் சிஎஸ்கே ரசிகர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles