அடிச்சு சொல்றேன்.. சச்சினின் இந்த சாதனையை கோலியால் இனி தொடவே முடியாது – ஆஸி வீரர் பிராட் ஹாக் பேட்டி

சச்சின் டெண்டுல்கரின் டெஸ்ட் போட்டி சாதனைகளை இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோலியால் முறியடிக்க முடியாது என ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்திருக்கிறார். மேலும் விராட் கோலி கடந்த சில ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தன்னுடைய பார்மை இழந்து விட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார். 2019 ஆம் ஆண்டு வரை டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்த விராட் கோலி கடந்த 5 ஆண்டுகளில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக மட்டும் 2 சதங்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி கடந்த வருடம் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் எடுத்த வீரர் என்ற சாதனையை முறியடித்தார். மேலும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது 50ஆவது சதத்தையும் நிறைவு செய்தார். இந்நிலையில் தற்போது இந்திய அணி அதிகமான டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதன் காரணமாக விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் டெஸ்ட் போட்டி சாதனைகளை முறியடிப்பார் என்ற ஒரு கருத்து கிரிக்கெட் உலகில் நிலவி வருகிறது.

- Advertisement -

இது தொடர்பாக பேசியிருக்கும் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக், விராட் கோலியால், சச்சின் டெண்டுல்கரின் டெஸ்ட் போட்டி சாதனைகளை முறியடிக்க முடியாது என தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக யூடியூப் சேனலில் பேசி இருக்கும் அவர் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க மாட்டார் என தெரிவித்துள்ளார். மேலும் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை இழந்து விட்டதாக கூறிய பிராட் ஹாக் சில வருடங்களாக விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் தடுமாறி வருவதாக தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி தற்போது விளையாட இருக்கும் 10 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி தன்னுடைய பழைய சிறப்பான ஆட்டத்தை மீட்டெடுத்தால் அவரால் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படி இல்லை என்றால் விராட் கோலியால், சச்சின் டெண்டுல்கரின் டெஸ்ட் போட்டி சாதனைகளை நெருங்க முடியாது என தெரிவித்திருக்கிறார். மேலும் இது குறித்து தொடர்ந்து பேசிய பிராட் ஹாக் இங்கிலாந்து அணியின் வீரர் ஜோ ரூட் டெண்டுல்கரின் சாதனையை நெருங்கலாம் என தெரிவித்திருக்கிறார்.

தற்போது ஜோ ரூட் 146 டெஸ்ட் போட்டிகளில் 12,000 ரன்கள் எடுத்திருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15,921 ரன்கள் குவித்துள்ளார். இனி வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடினால் ஜோ ரூட்,, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை நெருங்க முடியும் என பிராட் ஹாக் தெரிவித்துள்ளார். மேலும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஜோ ரூட்டுக்கு இருக்கும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கும் சச்சின் டெண்டுல்கர் 15,921 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் 51 சதங்களும் 68 அரை சதங்களும் அடங்கும். தற்போது 35 வயதாகும் விராட் கோலி 114 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,871 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 29 சதங்களும் 30 அரை சதங்களும் அடங்கும். விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பதற்கான இடைவெளி மிகப் பெரியதாக இருக்கிறது. இதன் காரணமாகத்தான் விராட் கோலியால் அந்த சாதனையை முறியடிக்க முடியாது என கூறுகிறேன் என்று பிராட் ஹாக் தெரிவித்திருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles